லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

183

ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கபட்டுள்ளது, இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது. இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பாடல்வரிகள் அமைக்கபட்டுள்ளது.

பிராங்க்ஸ்டர் ராகுல் ஒரு நடிகனாக அவரது திறனை தாண்டி, இதை புரிந்து கொண்டு இந்த பாடலுக்கு ஏற்ற அசத்தலான நடனத்தை கொடுத்துள்ளார். சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் பாடலுக்கு ஒரு புது திரை வண்ணத்தை அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிவீ அவரது முழு திறமையையும் செலுத்தி, ஒரு அற்புதமான பிரேக்கப் பாடலை கொடுத்துள்ளார். பாடல் பற்றி கேட்டதற்கு அனிவீ. ”இது ஒரு சோக பாடல்” என கூறினார். அந்தோனி தாசன், அனிவீயுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். “மயக்கிறியே” என்ற வெற்றி பாடலுக்கு பிறகு இசையமைப்பாளர் அனிவீ, சரிகம உடன் இணையும் இரண்டாவது பாடல் இது.