பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது

J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது

இணைப்பு : https://youtu.be/3RQ92y1IQaI

மும்பை, இந்தியா- மே 16, 2024 – பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித் தொடர் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ் ஆஃப் பவர்” இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க் நகரத்தில் நேற்று காலை வெளியிட்ட போது, அதில் கலந்துக்கொண்ட பார்வையாளர்கள் பின்னோக்கி மிடில் எர்த் காலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொடரின் முதல் சீசன் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்த ஒன்றாகவும் மற்றும் அதன் வெளியீட்டு நாள் முதல் இன்றைய தேதிவரை வேறு எந்த ஒரு வெளியீட்டுக்கும் இல்லாத வகையில் உலகம் முழுவதிலிருந்தும் பிரைம் சைன் அப்களை அதிகளவில் பெற்று பிரைம் வீடியோவின் ஒரு தலைசிறந்த ஒரிஜினல் வீடியோவாகவும் திகழ்ந்தது.

மேலும், இந்த இரண்டாவது சீசன், 2024 ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை அன்று உலகளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பல்வேறு மொழிகளில் அறிமுகப்படுத்தப்படப்போ வதையும் பிரைம் வீடியோ அறிவித்தது.

சார்லி விக்கர்ஸ் உலகின் தலைசிறந்த இலக்கிய ரீதியிலான வில்லன்களில் ஒருவரான சௌரன் பாத்திரத்தை ஏற்று, மிடில் எர்த் குடிமக்களை ஏமாற்றி வஞ்சிப்பதற்கு உதவும் ஒரு புதிய தோற்ற வடிவத்தில் மீண்டும் தோன்றவிருப்பதையும் இந்தப் புதிய இரண்டாவது சீசனின் கீ ஆர்ட் இன்று வெளிப்படுத்தியது. .

இந்த அறிமுக டீஸர் ட்ரெய்லர் பார்வையாளர்களை அதிரடி காட்சிகள் நிறைந்த J.R.R டோல்கியனின் செகண்ட் ஏஜ்க்கு பின்னோக்கிய பயணத்தில் அழைத்துச் சென்று அங்கே சௌரன், முழுமையான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது பழிவாங்கும் தொடர் முயற்சிகளின் தீவினைச் செயல்கள்… உச்சத்தை எட்டிக்கொண்டிருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. பிரமாண்டமான காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற இந்தத் தொடர், அதற்கிணங்க இந்த இரண்டாவது சீசனிலும் திரைப்படக் கலையின் மகிமையை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, கலாட்ரியல், எல்ரோன்ட், பிரின்ஸ் டுரின் IV, அரோண்டிர் உட்பட ரசிகர்களுக்கு பிடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மீண்டும் தோன்றப்போவதை பறைசாற்றுகிறது. அத்துடன் கூடுதலாக மிகவும் ஆர்வத்தோடு, மிகப் பெரு மளவில் எதிர்பார்த்த ரிங்குகள் அதிகளவு உருவாவதையும் இதன் முதல் பார்வை வெளிப்படுத்து கிறது.

‘தி ரிங்க்ஸ் ஆஃப் பவர்’ சீசன் இரண்டில், சௌரன் மீண்டும் தோன்றுகிறார். கெலட்ரியலால் வெளியேற்றப்பட்டு எந்த ஒரு இராணுவம் அல்லது கூட்டாளியும் இல்லாமல் தனித்து விடப்பட்ட இந்த வளர்ந்து வரும் இருண்ட உலகத்தின் தலைவன், இப்போது தான் இழந்த தனது வலிமையை மீண்டும் மீட்டெடுக்கவும் ‘மிடில் எர்த்’தின் அனைத்து மக்களையும் தனது வஞ்சக எண்ணங்களுக்கு கீழ்ப்படிய வைத்து கட்டுப்படுத்தவும் உதவும் ரிங்ஸ் ஆப் பவர் உருவாக்கப்படுவதைக் காண தனது சொந்த தந்திரத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலாவது சீசனின் காவியக் கதைக்களத்தின் வாய்ப்பளவு மற்றும் லட்சியத்தின் அடிப்படையில், கட்டமைக்கப் பட்ட இந்த புதிய சீசன் அதன் மிகவும் அன்புக்குரிய மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய கதாபாத்திரங்களையும், மேலோங்கி எழுந்துவரும் இருண்ட சக்திகளின் ஆற்றலில் மூழ்கடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பேரழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் உலகில் தங்கள் இடத்தை அடையாளம் காணுவதற்கான சவால்களை எதிர்கொள்ளச்செய்கிறது. எல்வ்ஸ் மற்றும் ட்வார்ஃப்ஸ், ஓர்க்ஸ் மற்றும் மனிதர்கள், விசார்ட்கள் மற்றும் ஹர்ஃபுட்ஸ்…களால் நட்புணர்வு சிதைந்து பேரரசுகள் பிளவடையத் தொடங்கிய நிலையில் நல்லெண்ணம் கொண்டோர் தங்களுக்கு மிகமிக முக்கியமான ஒன்றாகத் திகழும் தங்களுக்கிடையேயான —- ஒருவருக்கொருவர் ஆதரவு நிலையை. வீரத்தோடு பற்றிக் கொள்கிறார்கள்.

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்: இரண்டாவது சீசன், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக கிடைக்கும்.
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர். சீசன் இரண்டின் டீஸர் டிரெய்லர் மற்றும் கீ ஆர்ட் அஸ்ஸெட்களையும் அத்துடன் சீரியல் குறித்த கூடுதல் தகவல்களையும் காண தயவு செய்து Amazon MGM Studios press site. க்கு வருகை தரவும்

#லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர்
Comments (0)
Add Comment