திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் சூது கவ்வும் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஜெ.அர்ஜுன்.
இதில் சிவா – குருநாத், ஹரிஷா ஜஸ்டின் – அம்மு, கருணாகரன் – அருமை பிரகாசம், வாகை சந்திர சேகர் – கண்ணபிரான்,பாஸ்கர் – ஞாநோதயம், கவி – அசால்ட், கல்கி – காலி, அருள் தாஸ் – ரவுடி டாக்டர், யோக் ஜேபி – பிரம்மா, கராத்தே கார்த்தி – தேவனாயகம், ராதா ரவி – சத்ய சீலன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை (பாடல்கள்): எட்வின் லூயிஸ் விஸ்வநாத், இசை (பின்னணி): ஹரி எஸ்.ஆர், ஒளிப்பதிவாளர் -கார்த்திக் கே தில்லை, எடிட்டர்: இக்னேஷியஸ் அஸ்வின் , பாடல் வரிகள்: லா வரதன், ஆண்ட்ரூஸ், பார்த்திபன், ஆடை வடிவமைப்பாளர்: ஸ்வேதா தங்கராஜ்,நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஆர்.ராகேஷ், ஹரிஹரன், சந்தோஷ், ஒலி வடிவமைப்பு: சுகுமார் நல்லகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர், ஒலி கலவை: ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன், விளம்பர எடிட்டர்: ரமேஷ் யுவி ,பிஆர்ஓ – நிகில் முருகன்
சூது கவ்வும் 2 இல், கடத்தல் தொழில் செய்யும் குரு (சிவா) சிறைத் தண்டனைக்குப் பிறகு தனது ‘கடத்தல்’ தொழிலை புதுப்பிக்க முயற்சிக்கிறார். 2013-ம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன் நடந்த சம்பவங்களுடன் தொடங்குகிறது கதைக்களம். இப்பொழுது சிறைவாசம் முடிந்து வெளியே வரும் குருவின் கடத்தல் தொழில் ஆரம்பமாகிறது. அருமை பிரகாசம் (கருணாகரன்) கடந்த 12 ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்து, தமிழகத்தின் ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கிடையில், முன்னாள் முதல்வர் வேட்பாளர் கண்ணபிரான்( வாகை சந்திர சேகர்) பல வருடங்களுக்குப் பிறகு கோமாவில் இருந்து எழுந்து தமிழகத்தை சீர்திருத்த முயற்சிக்கிறார். இதனால் பல உறுப்பினர்கள் பிரியும் சூழல் நேர அந்தக் கட்சியில் பெரிய சிக்கல் உருவாகிறது. தேர்தலில் பண பட்டுவாடா செய்தால் ஜெயிக்கலாம் என்று ஊழல் முதல்வர் சத்ய சீலன் (ராதா ரவி) அந்த பொருப்பை அருமை நாயகத்திடம் கொடுக்கிறார். அருமை நாயகம் இந்த வேலையை செய்து முடிக்க விளையாட்டு செயலி மூலம் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யும் ஒரு வங்கி பாஸ்வேர்டு இருக்கும் டேப்லட் காணாமல் போகிறது. அதே சமயம் தன்னுடைய கற்பனை காதலியின் சாவுக்கு காரணமான அருமைப் பிரகாசத்தை பழிவாங்கத் துடிக்கும் குரு. குருநாத் கேங்கை பிடிக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேப்பி). இந்நிலையில் எதிர்பாராத விதமாக குருவிடம் அருமைநாயகம் மாட்டிக் கொள்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அருமைநாயகத்தால் அந்த டேப்லட்டை கண்டுபிடிக்கமுடிந்ததா? அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டனாரா? என்பதுதான் ‘சூது கவ்வும் 2’ படத்தின் மீதிக்கதை.
சிவா தன்னுடைய அக்மார்க் காமெடி மாடிலேஷன் டயலாக்குடன் தன்னுடைய கதாபாத்திரத்தை செய்துள்ளார் என்றாலும் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பது போல் காட்டியிருப்பதும், குடிக்காவிட்டால் பாம்பு தெரியும் என்று பண்ணும் கலாட்டா ரசிக்கும்படி இல்லை.
ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன்;, வாகை சந்திர சேகர், பாஸ்கர், கவி, கல்கி, அருள் தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, ராதா ரவி ஆகியோர் நிறைவாக செய்துள்ளனர்.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையும், ஹரி எஸ்.ஆர் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு கடத்தல் காட்சிகள், தண்டனை தரும் வெள்ளை அறை, அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று தன் பங்களிப்பை இயன்ற வரை சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார்.
இக்னேஷியஸ் அஸ்வின்; இந்த படத்தின் காட்சிகளுக்கிடையே பழைய சூது கவ்வும் படத்தை நடுநடுவே இணைத்து திரையில் கொடுத்து தடுமாறியிருப்பது தெரிகிறது.
சூது கவ்வும் படம் போன்று கொடுக்க நினைத்து அதன் காட்சிகளை முன்னுரையாகத் தொடங்கி, அதன் தொடர்ச்சியாகத் அரசியல் நையாண்டி, நகைச்சுவை, கடத்தல், பழிவாங்குதலுடன் கதைக்களத்தை முன்னுக்கு பின் முரணாக இயக்கியுள்ளார் எஸ்.ஜெ.அர்ஜுன். பெரும்பாலான காட்சிகள் குழப்பத்துடன் அர்த்தமில்லாமல் கொடுத்து படம் முழுவதும் குடிபோதையில் தள்ளாட விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜெ.அர்ஜுன்.
மொத்தத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் சூது கவ்வும் 2 தள்ளாடும் அபத்தங்களின் உச்சம்.