Kanni Movie Review

சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.

கதை

காலகாலமாக மூதாதையர்கள் வசித்த மலைக் கிராமத்தில், அவர்களை பின்பற்றி  செங்கா என்ற மூதாட்டி, தெய்வீகத் தன்மையுடைய ஓலைப் பெட்டியின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி  தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார்.
இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு வரும் ஒரு பெரும் பணக்காரர், திடீரென மூர்ச்சையற்று விழுகிறார். அவருடன் வந்தவர்கள் அவரை மூதாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, அவருக்கு இருந்த தீராத நோய் காணாமல் போகிறது. இதனால் சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்.
மூலிகை சிகிச்சைப் பெற்ற அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிக்கும், பல உலக நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், அதிசிக்கின்றனர். இதனால், அந்த ஓலைபெட்டியை, மூதாட்டி செங்காவிடமிருந்து அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, கன்னி படத்தின் கதை.

மாதம்மா வேல்முருகன் செங்காவாகவும், அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மகள் செம்பியாக அஷ்வினி சந்திரசேகர், மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சழகனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ், ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளனர்.
சண்டைகாட்சிகளில், அதிக ரிஸ்க் எடுத்தும் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அந்த ஊரிலேயே உள்ள சிலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.செபாஸ்டியன் சதீஷ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரஙிக்கவைக்கிறது. ராஜ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி மூலிகை சித்த வைத்தியத்தின் பெருமையை கருவாக கொண்டு படத்தை ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#kannimoviereview
Comments (0)
Add Comment