Meiyazhagan Movie Review

2 D

E N T E R T A I N M E N T

P V T  L T D

வழங்கும்,

.ஜோதிகா – சூரியா தயாரிப்பில்

S A K T H I   F I L M

F A C T O R Y

B. சக்திவேலன்

வெளியீட்டில்

C. பிரேம் குமார்

இயக்கத்தில்…

கோவிந்த் வசந்தா

இசையில்

மகேந்திரன் ஜெயராஜு

ஒளிப்பதிவில்

கோவிந்த ராஜ்

எடிட்டிங்கில்

கார்த்தி,

அரவிந்த் சாமி,

ஶ்ரீ திவ்யா,

ராஜ்கிரண்,

சரன்,

சுவாதி கொண்டே,

தேவதர்ஷினி,

ஜே.பி,

ஜெய பிரகாஷ்,

ஶ்ரீரஞ்சனி,

இளவரசு,

கருணாகரன்,

சரண் சக்தி

மற்றும்

பலர் நடித்து செப்டம்பர் 27 அன்று வெளியாகும் படம் மெய்யழகன்.

கதை

யார் என்றே தெரியாத ஒருவர், தனக்கு திகட்ட திகட்ட அன்பு காட்டினால் ஒருவரால் என்ன செய்ய முடியும்? என்பதை  விவரிக்கிறது, மெய்யழகன் திரைப்படம்.

சொத்து பிரச்சனை காரணமாக, தனது இளமை பருவத்திலேயே  உயிருக்கு உயிராக நேசித்த வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வருகிறார், அருள்மொழி வர்மன் (அரவிந்த் சாமி). தன் தங்கையின் திருமணத்திற்காக, 22 வருடங்கள் கழித்து  மீண்டும் அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு திருமண மண்டபத்தின் இடத்தில் “அத்தான் அத்தான்” என அழைத்து, அர்விந்த்சாமியுடன் ஒட்டிக்கொள்ளும் கார்த்தி, அர்விந்த்சாமியை விழுந்து விழுந்து கவனிக்கிறார். கார்த்தியை யாரென்றே தெரியவில்லை என்றாலும், மனம் புண்படும் என்பதற்காக தெரிந்தது போல காட்டிக்கொள்கிறார், அர்விந்த்சாமி. கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்ஸை தவறவிடும் அரவிந்த் சாமி, கார்த்தியின் வீட்டில் தங்க நேர்கிறது

ஒரு நாள் இரவை கார்த்தியுடன் குடித்து, அரட்டை அடித்து கழிக்கும் அரவிந்த் சாமி, அவரை பற்றி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார், அவரது பெயரை தவிர. தன்னை நன்றாக தெரியும் என்று கூறி, தன்னிடம் இப்படி அன்பு காட்டும் ஒருவனை, தனக்கு தெரியவில்லையே என்று மனம் உடைந்து, கார்த்தியிடம் சொல்லாமல்-கொள்ளாமல் அவரது வீட்டில் இருந்து வெளியேறி சென்னை வந்துவிடுகிறார் அர்விந்த்சாமி. இறுதியில் அர்விந்த்சாமி கார்த்தியின் பெயர் என்ன? அவர் யார்? என தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்?  என்ற கேள்விகளுக்கு  விடை சொல்வதே மெய்யழகன் படம்.

கார்த்தியின் கதாப்பாத்திரம் கள்ளம் கபடமற்ற மனிதராக நன்கு அறிந்தவர்களே, ஆதாயத்திற்காக பிறருடன் பாசமாக பேசும் இந்த காலத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பல வருடங்களுக்கு முன்பு தெரிந்தவர் மீது எல்லையற்ற அன்பு காட்டும் மனிதராக  கார்த்தி சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

அரவிந்த் சாமி கொடுத்த கைரக்டரை  சிறப்பாக நடித்துள்ளார்.

அரவிந்த் சாமியின் மாமாவாக வரும் ராஜ்கிரண் கார்த்தி மனைவியாக  ஸ்ரீதிவ்யா, மற்றும் தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் என இதில் நடித்த அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு தஞ்சாவூரையும், சென்னையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில், கமல்ஹாசன் பாடிய “போய்வா..கலங்காதே” பாடல் மனதில் நிற்கிறது. பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான், படத்தின் பெரும்பான்மையான காட்சிகளாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், ஜல்லிக்கட்டு தடை, தமிழ் மன்னர்களின் வரலாறு போன்ற விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

ஊர் பாசம், சொந்தங்களுக்குகள் சொத்து பிரச்சனையால் வரும் வன்மம், விட்டுப்போன சொந்தங்களை திரும்ப பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி என இயல்பு வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை அழகாக சொல்லியிருப்பதோடு  நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமாே, அதையே பன்மடங்காக இன்னொரு காலத்தில் எதிர்பாராத வகையில் திரும்ப பெருவோம் என்பதை எல்லோரும் ரசிக்கும்படி சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். பாராட்டுக்கள்.

#meiyazhaganmoviereview
Comments (0)
Add Comment