Sellakutty Movie Review

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

90s கிட்ஸ்’ன் காதல் கதையான

“செல்லக்குட்டி” திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கதை

தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலுக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் படத்தின் கதை அமைந்துள்ளது

பதிணோராம் வகுப்பில் படிக்கும் கதாநாயகி செந்தாவுக்கு சிறுவயதிலிருந்து நண்பராக இருக்கும் கதாநாயகன் டிட்டோ.  இன்னோரு கதாநாயகன் மகேஷ் மற்றும் சில நண்பர்களுடன் அரட்டையுடன் பள்ளி வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. டிட்டோ மகேஷை செந்தாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். மகேஷ் நன்றாக படிக்கும் மாணவன் அப்பா அம்மா இல்லாதவர் என்பதால் செந்தா அவன்மீது பரிவுகாட்டி அன்பாக நல்ல நண்பன் என்று நினைத்து பழகுகிறாள் செந்தா. மகேஷ் செந்தாமீது காதல் கொள்கிறான். செந்தாவுக்கு மகேஷ்மீது காதல் இல்லை. நேரிடியாகவே செந்தா சொல்கிறாள். காதல் கைகூடாததால் மகேஷ் பணிரெண்டாம் வகுப்பில் பெயிலாகிறான். மற்றவர்கள் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். செந்தா டிட்டோவை காதலிக்கிறாள். டிட்டோ வீட்டிலும் செந்தாவை பெண்கேட்டு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். ஆனால் டிட்டோவோ நண்பன் காதலித்த பெண்ணை திருமணம் செய்வது துரோகம் என்று செந்தாவை திருமணம் செய்ய மறுக்கிறார். இதன் பிறகு செந்தாவுக்கு வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பிறகு செந்தாவின் வாழ்க்கையில் சில அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கிறது அது என்ன? அதன் பிறகு செந்தாவின்  நிலமை என்னாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகர்களாக டிட்டோ, மகேஷ் இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். செந்தாவாக தீபிக் ஷா சிறப்பாக நடித்துள்ளார். செந்தாவின் அப்பாவாக செந்தமிழன். கல்லூரி முதல்வராக மதுமிதா, புரப்பசராக சாம்ஸ் நன்றாக நடித்துள்ளனர். மற்றும்

திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார் சிற்பி.  டி.எஸ்.முரளிதரனின் இசையில் மூன்று பாடல்களும்

கணேஷ் ராம் பி.எஸ். இசையில் வரும், “தொலைந்து போனாளே…” பாடலும் ரசிக்கவைக்கிறது.

பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

‘சிந்துநதி பூ’ செந்தமிழனின் வசனம் அருமை.

முக்கோண காதல் கதையாக இருந்தாலும், ஒவ்வொரு சூழலிலும், பல திருப்பங்களுடன் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் இயக்குநர் சகாயநாதன்.

மொத்தத்தில், இந்த ’செல்ல குட்டி’யை  பார்க்கலாம்

#sellakuttymoviereview
Comments (0)
Add Comment