மாலா மணியன் தயாரிப்பில் சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் சய்யுக்தா விஜயன், கஜராஜ், கீதா கைலலாசம், கிட்டி, பிரசன்னா பாலசந்திரன், வின்னர் ராயச்சந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நீஸ நிற சூரியன்.
கதை
ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் பாதிப்பால் வேறு பாலினத்தவராக மாறும் நபர்களை திருநங்கைகளாகவே பார்க்கும் இந்த சமூகம் பெண்ணாக அங்கீகரிப்பதில்லை. அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்படும் கதையின் நாயகனான அரவிந்த், பானுவாக மாற்றம் அடைவது எப்படி?, அதை அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்களை கடந்து செல்லும் அவரது பயணத்தை இதயம் கனக்கும் படி சொல்லியிருப்பதே ‘நீல நிற சூரியன்’. படத்தின் கதை.
அரவிந்த மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன் சிறப்பாக நடித்துள்ளார்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் கிட்டி, அரவிந்தின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அரவிந்தின் உறவினராக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி துணை தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் வேடத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், கெளசல்யா, விஸ்வநாத் சுரேந்திரன், வைதீஸ்வரி என இதில் நடித்திருக்கும் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகளை கவனித்துள்ள ஸ்டீவ் பெஞ்சமின், பணி படத்திற்கு பெரிய பலம்.
ஹார்மோன் குறைபாட்டினால் பிறந்த பாலினத்தில் இருந்து வேறு பாலினத்திற்கு மாறுபவர்கள், இந்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயனுக்கு பாராட்டுக்கள்.