Vettaiyan Movie Revierw

*LYCA* PRODUCTIONS
வழங்கும்,
சுபாஷ்கரன்
தயாரிப்பில்…
ரெட் ஜெயன்ட் மூவிஸ்
வெளியீட்டில்.
T.J .ஞானவேல்
இயக்கத்தில்..
அனிருத் ரவிச்சந்திரன்
இசையில்..
S.R கதிர்
ஒளிப்பதிவில்…ஃபிலோமின் ராஜ்
எடிட்டிங்கில்….
ஸ்டண்ட் மாஸ்டர்
அன்பரிவ்
சண்டை பயிற்சியில்…
ரஜினிகாந்த்,
அமிதாப் பச்சன்,
ஃபகத் ஃபாசில்,
மஞ்சு வாரியார்,
ரித்திகா சிங்,
தூஸ்ரா விஜயன்,
ராணா டகுபதி,
கிஷோர், ரோஹினி,
அபிராமி, ராவ் ரமேஷ்,
ரமேஷ் திலக் ரக்சென்,
GM.சுந்தர்
என மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
வேட்டையன்
 
கதை
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடியிசம், மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி ஆசிரியர்களிடம் செய்யும் அட்டூஷியம் என தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதை ரஜினி சரி செய்கிறார். இந்த சூழ்நிலையில்
போதைப்பொருளை துஷ்யரா விஜயன் ஆசிரியராக பணிபுரியும் அரசு பள்ளியிலே பதுக்கி வைத்து தொழில் செய்கின்றனர். ஆந்த குரூப்பை Sp யான ரஜினிக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறார் துஷ்யரா விஜயன். இதை செய்ததால் துஷ்யரா ஆசைப்பட்டபடி சென்னை பள்ளிக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். சென்னைக்கு மாற்றம் ஆன சில நாளில் துஷ்யரா விஜயனை கற்பழித்து கொள்கின்றனர். துஷ்யரா விஜயனை கற்பழித்து கொன்றவனை ரஜினி என்கவுண்டரில் கொலை செய்கிறார். மனித உரிமைக் கமிஷன் அதிகாரியான அமிதாப்பச்சன் ரஜினியிடம் நீங்கள் கொன்றது உண்மையான குற்றவாளி அல்ல. தப்பாக என்கவுண்டர் செய்துள்ளீர்கள் என்று சொல்ல. உண்மை உணர்ந்து தான் செய்த தவறுக்கு பிரயாசித்தமாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து ரஜினி என்ன செய்தார்? என்யதே படத்தின் மீதிக்கதை.
 
ரஜினி பாடல்களிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் நடிப்பிலும் அசத்தி கைதட்டல் பெறுகிறார். அமிதாப்பச்சன் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். பகத்பாசில் ஜாலி கேரக்டர் அவர் நடிப்பு படத்திற்கு பிளஸ். ரித்விகாசிங் போலிஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். மஞ்சு வாரியர் ரஜினியின் மனைவியாக யூ டியூப்ராக வந்து கலக்குகிறார். கிஷோர் நடிப்பும் அருமை. வில்லனாக ராணா நடிப்பில் மிரட்டியுள்ளார். இதில் நடித்திருக்கும்
ரோஹினி,
அபிராமி, ராவ் ரமேஷ்,
ரமேஷ் திலக் ரக்சென்,
GM.சுந்தர்
என எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர்.
அனிருத்தின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. S R கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
 
ஜெய்பீம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் T J ஞானவேல் என்கவுண்டர் பற்றியும் நீட் கோச்சில் நடைபெறும் ஊழல்களையும் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார். தரமான படத்தை தயாரித்திருக்கிறார்கள் லைக்கா. பாராட்டுக்கள்.
#vettaiyanmovierevbiew
Comments (0)
Add Comment