Brother Movie Review

ராஜேஷ் M இயக்கத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் பூமிகா VTV கணேஷ் நட்டி மற்றும் பலர நடித்தி தீபாவளிக்கு வெளியாகும் படம் பிரதர்.

கதை

ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். போற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேசுகிறார். இந்த சூழ்நிலையில்
ஜெயம் ரவி தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பழமையாகிவிட்டதால் சில இடங்களில இடிந்து விழுகிறது. அதை இடித்து கட்டவேண்டும் என்று சங்கத்திடம் சொல்லியும் கேட்காததால் அடுக்குடிமாடி குடியிருப்பு சங்கத்திடம் சொல்லாமலேயே குடியிருப்பை இடிக்க ஜெயம் ரவி அரசிடம் இருந்து உத்தரவு வாங்கியதால் பிரச்சனை ஏற்படுகிறது.

இனியும் இவனை இங்கு வைத்திருந்தால் மேலும் பிரச்சனையாகிவிடும் என ஊட்டியில் இருக்கும் அக்கா ஆனந்தியின்(பூமிகா) வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் ஜெயம் ரவியின் பெற்றோர்.அடங்காத தம்பியை அக்கா திருத்துவார் என நம்பி அங்கு அனுப்பி வைக்கிறார்கள். யோசிக்காமல் எதையும் செய்யும் ஜெயம் ரவியால் அக்கா குடும்பத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
ஜெயம் ரவியின் வேலையிலும் பிரச்சனை.. ஒரு கட்டத்தில் பூமிகாவின் மாமனாருக்கும், ஜெயம் ரவிற்கும் இடையே மோதல் ஆகிவிடுகிறது. பூமிகாவின் மாமனார்(ரமேஷ் ராவ்) ஈகோ அதிகம் உள்ள கலெக்டர். அவருடன் ஜெயம் ரவி மோத வாக்குவாதம் முற்றி குடும்பங்கள் பிரிகிறது
இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் கூட ஜெயம் ரவி திருந்தவில்லை.. இந்த சூழ்சூழ்நிலையில் ஜெயம் ரவி அப்பா பிரச்சனையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீ என் மகனே இல்லடா என சொல்ல ஜெயம் ரவி தன் குணத்தை மாற்றுகிறார். உடைந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுகிறார் அவருக்கு துணையாக இருக்கிறார் அர்ச்சனா(ப்ரியங்கா மோகன்). உடைந்த அக்கா குடும்பத்தை எப்படி ஒன்று சேர்த்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜெயம் ரவி கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார். ஜெயம் ரவியின் நடிப்பு நடிப்பு சிறப்பாக உள்ளது. அவரின் ஒவ்வொரு எமோஷனும் அருமை. பாசக்கார அக்காவாக நன்றாக நடித்திருக்கிறார் பூமிகா. ஹீரோயின் ப்ரியங்கா அழகாக வந்து போகிறார். பூமிகாவின் கணவராக நடித்திருக்கும் நட்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். தலைக்கனம் பிடித்த கலெக்டராக வந்து கைதட்டல்களை பெறுகிறார் ராவ் ரமேஷ். VTV கணேஷ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்காமிஷி பாடல் அருமை. மற்ற பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறார்.

முதல் பாதி சிரிக்க வைக்கிறார். குடும்ப பிரச்சனை பெரிதானதும் படம் லைட்டாக சீரியல் பீலிங் ஏற்படுத்துகிறது. இயக்குநர் ராஜேஷ் M குடும்பத்துடன் ரசிக்ககூடிய படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#brothermoviereview
Comments (0)
Add Comment