K.பாலாஜி தயாரிப்பில் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக் விவேக் பிரசன்னா சுபிக்ஷா மோகனசுந்தரம் பார்த்தீபன்குமார் ஜனனி RJ பிரியங்கா ஸ்ரீஜா கவின் GT மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பேமிலி படம்
கதை
பட ஒப்பனிங்கில் தீபாவளியன்று கதாநாயகன் உதய் கார்த்திக் குடும்பம் கதாநாயகி அப்பா கொடுத்த புகாரால் போலிஸ் ஸ்டேஷனில் இருக்கின்றனர். எதறாக்காக என்று கதை பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது.
கதாநாயகன் உதய் கார்த்திக். இவருக்கு இரண்டு அண்ணன்கள் விவேக் பிரசன்னா பார்த்திபன் குமார்.. பெரிய அண்ணன் விவேக் பிரசன்னா வக்கீலாக இருக்கிறார். சின்ன அண்ணன் பார்த்திபன் குமார் ஜடியில் வேலை செய்கிறார். உதய் கார்த்திக் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். உதய்கார்த்திக் முயற்சி செய்கின்ற காலங்களில் நிறைய அவமானங்களை சந்திக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு காதலியும் சீட்டிங் மூலம் கிடைக்கிறார். பெரிய தயாரிப்பாளர் கம்பெனியில் இரூத்து உதய் கார்த்திக்கு அழைப்பு வர நேரில் சென்று கதை சொல்ல கதை பிடித்துப்போய் அட்வான்ஸ் 5 லட்சம் வாங்குகிறார். உதய் கார்த்திக் தன் குடும்பத்தினரிடம் சொல்லி செக்கை கொடுக்கிறார். இந்த சூழ்நிலையில் இரண்டாவது அண்ணனுக்கு பெண்பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது. கதாநாயகன் உதய் கார்த்திக் மதுரை சென்று ஹீரோவிடம் கதை சொல்ல கதை பிடித்துப்போய் சில கரெக்ஷன் சொல்கிறார் ஹீரோ. வேண்டா வெறுப்பாக தயாரிப்பாளரின் நெருக்கடியால் அதையும் ஏற்றுக்கொள்கிறார் உதய் கார்த்திக். மதுரையில் உள்ள காதலியும் சந்தித்துவிட்டு சென்னை வருகிறார். வந்தவுடன் தயாரிப்பாளர் ஆபிஸ்க்கு செல்கிறார் உதய் கார்த்திக். ஆபிஸ் பூட்டியிருக்கிறது. தயாரிப்பாளருக்கு போன் செய்கிறார். தறாரிப்பாளர் போன் எடுக்கவில்லை பல நாட்கள் மூயற்சி செய்கிறார். தயாரிப்பாளர் போன் எடுக்கவில்லை. என்னவென்று தெரியாமல் நாட்கள் மாதங்கள் ஆகிறது. சில மாதங்கள் கழித்து தயாரிப்பாளரிடம் இருந்து போன் வருகிறது. அவசரமாக வர சொல்லி. இரண்டு அண்ணன்களையும் அழைத்து செல்கிறார். தயாரிப்பாளர் உதய் கார்த்திக்கிடம் கதையில் பெயர் போடுகிறேன். இயக்குநராக்க முடியாது.ஹீரோ ஒத்துக்கொள்ளவில்லை. என்று சொல்லிவிட்டார். அதனால் நான் உன் கதையை இயக்குகிறைன் என்று தயாரிப்பாளர் சொல்ல வாய்தகறாறு ஆகிறது. பின் உதய் கார்த்திக் விவேக் பிரசன்னா பார்த்திபன் குமார் மூவரும் வெளியே
வந்து என்னசெய்வது என்று யோசிக்க ஒரு கட்டத்தில் விவேக் பிரசன்னா நாமே படம் தயாரிக்கலாம் என்று சொல்ல நம்மிடமே பணம் இல்லை எப்படி என்று கதாநாயகன் உதய் கார்த்திக் பார்த்திபன் குமார் கேட்க பேமிலியே ஒன்னா.சேர்ந்து படம் எடுக்கிறோம் என்று விவேக் பிரசன்னா சொல்ல தம்பியை இயக்குநராக்க பேமிலியே ஒன்றாக சேர்ந்து படம் தயாரிக்க முயற்சி செய்கிறது. அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே பேமிலி படத்தின் சுவராஸ்யமான கதை.
உதய் கார்த்திக் விவேக் பிரசன்னா பார்த்திபன் குமார் மூவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.. கதையின் நாயகியாக சுபிக்ஷாவின் நடிப்பும் அருமை. தாத்தாவாக மோகன சுந்தரம் நண்பனாக கவின் GT அம்மாவாக ஸ்ரீஜா ரவி மற்றும் ஜனனி RJ பிரியங்கா என இதில் நடித்திருக்கும் ஆனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் அணிவீ அஜேஸ் அசோக் இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். R சுதர்ஷனின் எடிட்டிங் ஷார்ப்.
இயக்குநர் செல்வா குமார் எடுத்துக் கொண்ட கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றிபடமாக கொடுத்துள்ளார். பேமிலியுடன் பார்க்க்கூடிய படம் இந்த பேமிலி படம். பாராட்டுக்கள்.