சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க, ராஜவேல் கிருஷ்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்தில் ராஜவேல் கிருஷ்ணா, ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தூவல்.
கதை
‘சிங்காரப்பேட்டை’. இந்த ஊரானது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ளது. தென் பெண்ணையாற்றினை நம்பியே இந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.
ஆற்றில் நீர் இல்லாத போது, காட்டிற்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடுகின்றனர். இந்த சூழலில், அக்கிராம மக்களின் அன்றாட தொழிலை கெடுக்கும் நோக்கில் வன காவல் அதிகாரி ராஜ்குமாரும் ரெளடியாக வரும் சிவமும் செயல்படுகின்றனர்.
சிங்காரம்பேட்டைகிராமத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கு குட்டி மீன் கிடைக்கிறது. சிறுவனுக்கு மீன் கிடைத்ததும் மிக சந்தோஷம் அடைகிறான். ஆனால் அந்த மீன் இறந்து விடுகிறது இதனால் அந்த சிறுவன் சோகம் அடைகிறான். எப்படியாவது எப்படியாவது ஆற்றில் மீன் பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறான். அதே அந்த கிராமத்தில் குறிப்பிட்ட நாட்களில் அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்து விற்பனைசெய்து வாழ்வாதாரம் நடத்துகிறார்கள். அந்த ஊரில் வெடி செய்பவன் அவனும் வெடிவைத்து மீன் பிடிக்கிறான். அதையே மற்றவர்களும் செய்ய அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மீன் பிடிக்கும் பிரச்சனைக்கு என்ன தீர்வு? அந்த சிறுவன் மீன்பிடித்தானா? என்பதே படத்தின் மீதக் கதை
தயாரிப்பாளர் ராஜ்குமார் வனத்துறை அதிகாரியாக, மக்களை உறிஞ்சி வாழும் மனிதனாக சிறப்பாக நடித்திருக்கிறார்
போர் வெல் நடத்தும் பணப்பேராசை பிடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சிவம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாஸ்டர் நிவாஸ், ஒரு சிறிய மீனை பிடிக்க முயற்சிக்கும் அவனது போரட்டமும், பிடித்த மீனை திருப்பி ஆற்றில் விடும் மனித நேயமும், நன்று. நடிப்பும் அருமை.
படத்தில் நடித்த இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா என இதில் நடித்த அனைவரும் அந்த கிரமத்து மனிதர்களாகவே இயல்பாக நடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை ‘ஊத்தங்கரை’ கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் S.A. தர்வேஸ், படமா சதீஷ் இசையை ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.
தூவல் என்பது மூங்கில்களின் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறை. காலகாலமாக தூவல் முறைப்படி மீன் பிடித்து வரும் ஒரு சமூகம், ஒரு சிலரின் பேராசையால் அந்த மீன்பிடி முறையே முற்றிலுமாக அழிவது, அதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் பற்றிய கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி தூவல் திரைப்படத்திற்கு பல விருதுகளையும் வாங்கியுள்ளார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. பாராட்டுக்கள்.