Mufasa The Lion King Movie Review

இன்று (20-12-24) வெளியாஙியிருக்கும் படம் முஃபாசா The Lion King இப்படத்திற்கு நாசர், அசோக்செல்வன், அர்ஜூன்தாஸ், சிங்கம்புலி VTV கணேஷ் குரல்கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் : பாரி ஜென்கின்ஸ் எடிட்டர் : ஜோய் மெக்மில்லன் ஒளிப்பதிவாளர் : ஜேம்ஸ் லாக்ஸ்டன் இசை : ஹான்ஸ் சிம்மர்
கதை.
லயன் கிங் முஃபாசா மற்றும் டாக்காவின் நட்பு என்ன ஆனது என்பதுதான் கதை. ஒரு பெரிய வெள்ளம் ஏற்படுகிறது. அந்த வெள்ளத்தில் தாக்குகுதலால் முஃபாசா தனது அப்பா அம்மாவைவிட்டு பிரிக்கப்படுகிறார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முஃபாசாவை டாக்கா காப்பாற்றுகிறார். டாக்கா அப்பா முபாசாவை கொள்ளலாம் இல்லைபென்றால் அவன் நம்மை அழித்துவிடுவான் என்று சொல்ல டாக்கா அதற்கு மறுத்து டாக்காவும் அவரது தாயாரும் முஃபாசாவுக்கு ஆதரவுகொடுத்து அன்புகாட்டுகின்றனர். ​​டாக்காவின் தந்தையுயும் அவரது இனத்தையும் காப்பாற்ற வெள்ளை சிங்கததினரிடம் போராடும்போது தலைவனின் மகன் இறக்கிறார். அதனால் முஃபாசாவை கொள்ள நினைக்கிறார். அவர் முஃபாசாவை கொன்றாரா? இல்ஸையா? என்பதும் ஒரு கட்டத்தில் டக்காவுக்கும் முஃபாசாவுக்கும் விரிசல் ஏற்படுகிறது. அப்போது டாக்கா முஃபாசாவை அழிக்க நினைக்கும் எதிரியிடம் சேர்ந்து முஃபாசாவை கொள்ள முற்படுகிறார். இவர்களிடமிருந்து முஃபாசா தப்பித்தாரா? இல்லையா? முடிவில் முஃபாசா ராஜாவாக ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பைப் பொறுத்தவரை, ஆரோன் பியரின் முஃபாசா படத்தின் இதயம் என்றாலும், கெல்வின் ஹாரிசன் ஜூனியரின் டாக்காதான் மீண்டும் மீண்டும் நிற்கிறது. ஜோய் மெக்மில்லன் எடிட்டிங் ஷார்ப். ஜேம்ஸ் லாக்ஸ்டன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஹான்ஸ் சிம்மர் இசை ரசிக்கவைக்கிறது. இயக்குநர் பாரி ஜென்கின்ஸ் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள். ,
முஃபாசா: தி லயன் கிங் ஒருமுறை பார்க்கும் படமாகவும், டிஸ்னியின் லைவ்-அனிமேஷன்/ஆக்ஷன் படங்களில் மற்றொரு படமாகவும் இருக்கிறது முஃபாசா The Lion King.. முஃபாசா The Lion King படத்திற்கு தனது குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளனர் நாசர், அசோக்செல்வன், அர்ஜூன்தாஸ், சிங்கம்புலி VTV கணேஷ். பாராட்டுக்கள்.
#mufasayhe lion lingmoviereview
Comments (0)
Add Comment