விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார்,குஷ்பு, ராஜா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘நேசிப்பாயா’.
கதை
பார்த்தவுடன் அதிதி ஷங்கர் மீது ஆகாஷ் முரளிக்கு காதல் ஏற்படுகிறது. அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார். முதலில் மறுக்கும் அதிதி பின்னர் சில காரணங்களை கூறி அதாவது காதலிக்கும்போது, உனக்கும் எனக்கும் ஒத்து போகவில்லை என்றால் பிரேக்கப் பண்ணிவிடுவேன்என்று கூறி காதலை ஏற்றுக் கொள்கிறார்.
அதற்கு ஆகாஷும் சம்மதிக்க இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒத்து போகாததால் இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது. அதன் பின்னர் அதிதி வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார்
ஆனால் அங்கு கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் அதிதி சிறைக்கு செல்கிறார். 2 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர் காதலி சிறைக்கு சென்றதை அறிந்து ஆகாஷ் போர்ச்சுக்கல் செல்கிறார்.
அதிதி உண்மையிலேயேகொலை செய்தாரா? கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டாரா? யார் சிக்க வைத்தார்கள்? ஆகாஷ் எப்படி அதிதியை வழக்கில் இருந்து மீட்டார்? என்பதே நேசிப்பாயா படத்தின் மீதிக்கதை.
மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷிற்கு இது முதல் படம். நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் புதுமுகமா என்று கேட்குமளவுக்ககுசிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகனாக சினிமாவில் ஜெயிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதிதி ஷங்கர் நன்றாக நடித்து இருக்கிறார். அதேபோல் நடிகர் ராஜா சைலண்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார். முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ சிறப்பாக நடித்திருக்கிறார்கள். லீலை’ ஷிவ் பண்டிட்டிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கச்சிதமாக அதனை செய்துள்ளார். நடிகர் பிரபு ஒரு சீனில் வந்தாலும் தனது கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார். அதிதிக்காக வாதாடும் வக்கீலாக வரும் கல்கி கோச்சின், அடிக்கடி ஆகாஷை கலாய்ப்பது போல் திட்டும் இடங்கள் சிரிக்கும்படியான காமெடி. யுவன்ஷங்கர்ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம். Cameton Eric Brison ஒளிப்பதிவு அருமை. இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படம் இயக்கும்போது அவரை நம்பி சினைகா பிரிட்டோ படம் கொடுக்கும்போது ஆகாஷ் முரளிக்கு ஒரு வெற்றி படத்திற்கான கதையை கொடுக்காமல் அவரை வேஸ்ட் செய்துள்ளார். விஷ்ணுவர்தன் ஸ்டைலிஷ் மேக்கிங் மிஸ்ஸிங். மறைந்த முரளி மகன் ஆகாஷ்க்காக ரசிகர்கள் ஆதரவு கொடுங்கள்.