இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், பப்லு பிருத்விராஜ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தண்டேல்.
கதை
2019ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மீனவர்களின் கண்ணீர் கதை.
ஆந்திரா மீனவ கிராமத்தில் மீன்பிடித் தொழில் செய்து வரும் நாக சைதன்யாவும் அதே ஊரை சேர்ந்த சாய் பல்லவியும் சிறு வயது முதலே நெருங்கி பழகி காதலித்து வருகின்றனர். குஜராத் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில் தான் இவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கம். அப்படி நீண்ட தூரம் அவர்கள் செல்வதால் திரும்பி வர ஒன்பது மாதங்கள் ஆகும். இதனால் நாக சைதன்யாவை கடலுக்குள் செல்ல வேண்டாம் என சாய் பல்லவி எச்சரிக்கிறார். மீறி சென்றால் நமது காதல் நிலைக்காது என்றும் சொல்கிறார். ஆனால் ஊர் மக்களுக்காகவும், தன்னை நம்பி உள்ள 22 மீனவர்களுக்காகவும் கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் வீசியதால் நிலை தடுமாறி பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்று விடுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது பாகிஸ்தான் கடற்படை. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் நாகசைதான்யாவை காப்பாற்ற எந்தளவுக்கு போராட்டங்களை சாய்பல்லவி செய்கிறார். அதில், அவர் வெற்றிப் பெற்று நாகசைதன்யாவை காப்பாற்றினாரா? இல்லையா? தண்டேல் படத்தின் கதை.
நாக சைதன்யா மீனவராக நடிப்பிலும், நடனத்திலும், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.சாய் பல்லவியின் கேரக்டர் பல மீனவ பெண்களின் எண்ண பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. காதலனிடம் காட்டும் அன்பு, தனது வாழ்வுக்கான உத்திரவாத போராட்டம் என பல இடங்களில் தன்னுடைய நடிப்பு வாயிலாக அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். கருணாகரன் கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பப்லு பிருத்விராஜ் சாய் பல்லவியின் அப்பாவாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.ஆடுகளம் நரேன் மற்றும் மீனவர்களாக நடித்துள்ளவர்கள் என இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.சாம்தாத் சபாஷின் ஒளிப்பதிவுபடத்திற்கு பெரிய பலம்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இரண்டாம் பாதியை சுவாராஸ்யமாக சொல்லி ரசிக்கவைத்தவர் முதல் பாதியையும் ஸ்லோவாக செல்வதை இன்னும் கொஞ்சம் சுவாராஸ்யப் படுத்தியிருக்கலாம். பார்க்கலாம். பாராட்டுக்கள்