சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகிபாபு, ரவிமரியா, ஓ.எ.கேசுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக் காளை, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சைதான்யா, டெம்பில் சிட்டிகுமார், லேகா ஸ்ரீ மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஒத்தவோட்டு முத்தையா.
இசை : சித்தார்த் விபின்
கதை
தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார்.பின் வசதியாக அரசியல்வாதியான கவுண்டமணி தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவரின் சகோதரிகள் தங்களுக்கு பிடித்த மூன்று பேரை காதலிக்கின்றனர். அவர்களிடம் ஒரே குடும்பம் என பொய் சொல்லி பெண் கேட்க வர சொல்கிறார்கள். அதே வேளையில் பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்து, சொத்தை அபகரிப்பதற்காக திருட்டுக் குடும்பமான சிங்கமுத்துவும் தன் மனைவி மகன்களுடன் பெண் கேட்க வருகிறார்கள். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சூழ்நிலையில் இடைத்தேர்தல் வருகிறது. தேர்தலில் கட்சி சார்பில் நிற்க அவருக்கு சீட் கொடுக்காததால் சுயேட்சையாக கவுண்டமணி போட்டியிடுகிறார். அவரது கட்சி சார்பில் யோகி பாபு வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதோடு ஆளுங்கட்சி அமைச்சரான ஓ.ஏ.கே. சுந்தர், தன் அரசியல் எதிரி கவுண்டமணியை தோற்கடிக்க ரவி மரியாவை வேட்பாளராக நிறுத்துகிறார். பரபரப்பாக நடந்த இந்த தேர்தலில் கவுண்டமணி வெற்றி பெற்றாரா? தங்கைகளுக்கு தான் நினைத்தபடி திருமணத்தை நடத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக, அரசியல் வாதியாக நடிப்பிலும் நடனத்திலும், சண்டைக் காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார்.யோகிபாபுவின் நடிப்பு சிறப்பு. மற்றும் இதில் நடித்திருக்கும் ரவிமரியா, ஓ.எ.கேசுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக் காளை, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சைதான்யா, டெம்பில் சிட்டிகுமார், லேகா ஸ்ரீ என எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். காத்தவராயனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சித்தார்த் விபின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் சுமார்.
இயக்குநர் ராஜகோபால் காமெடியில் கலக்குவார். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு தமிழக அரசியல் கள சம்பவங்களை பங்கமாக கலாய்த்து இருப்பது ஓரளவு ரசிக்க முடிந்தாலும், இன்னும் சிரிக்க முயற்சித்திருக்கலாம். கவுண்டமணிக்காக பார்க்கலாம்.