யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், யோகி பாபு, பிரக்யா நக்ரா, சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், இளவரசு, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, ஸ்ரீராம், டைகர் தங்கதுரை, லொள்ளு சபா சேசு, ராமர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பேபி & பேபி. டி இமான் இந்த படத் இசையமைக்க, சாரதி ஒளிப்பதிவும், ஆனந்த லிங்க குமார் எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளார்கள்
கதை
சத்யராஜ் மற்றும் நிழல்கள் ரவி இருவரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களது மகன் மற்றும் மகள் முறையே ஜெய் மற்றும் பிரக்யா ஆவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி விடுகின்றனர். மறுபுறம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளவரசு தனது மகன் யோகி பாபுவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புகிறார். அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் யோகி பாபு.ஜெய் மற்றும் யோகி பாபு அவர்களின் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதால் இருவீட்டாரும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஜெய்க்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது என்று தெரிந்ததும் சத்யராஜ் தனது மகன் மற்றும் மருமகளை மீண்டும் வீட்டிற்கு அழைக்கிறார். மறுபுறம் இளவரசு தனக்கு பெண் வாரிசு பிறந்துள்ளது என்று தெரிந்ததும் யோகி பாபுவை வீட்டிற்கு அழைக்கிறார். இவர்கள் இருவரும் ஊருக்கு திரும்பும் போது இவர்கள் இருவரது குழந்தையும் மாறிவிடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் Baby & Baby படத்தின் கதை.
கதாநாயகனாக ஜெய் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஜெய்க்கு இணையான கதாபாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியாக கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார்.சத்யராஜ் மற்றும் இளவரசு அவரவர்கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகியாகபிரக்யா நக்ரா சிறப்பாக நடித்துள்ளார்.தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ராமர், ஆனந்தராஜ், கிங்ஸ்லி,லொல்லுசபா சேச்சு, என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சாரதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். எடிட்டிங் ஆனந்த லிங்க குமார் படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.டி இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது
இயக்குனர் பிரதாப் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டியிருக்கலாம். பாராட்டுக்கள்.