Dinasari Movie Review

 

ஐடி துறையில் பணியாற்றும்  ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், என்று நினைக்கிறார். அதற்காக அவர் வீட்டாருடன் பல பெண்களை பார்த்து கொண்டிருக்கிறார் நாயகி சிந்தியா லூர்தே அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ நினைக்கிறார். எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவருக்கும்  திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட, அதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா?  இல்லையா ?  என்பதை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருப்பதே ‘தினசரி’. படத்தின் மீதிக்கதை
 ஸ்ரீகாந்த்  நடிப்பிலும் நடனத்திலும் நன்றாக செய்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.   நன்றாகவும் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த கதாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது  ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம் 
இயக்குநர் ஜி.சங்கர், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது, என்ற பழமொழிக்கேற்ப தற்போதைய தலைமுறையினர் முன்னேற்றம் என்ற பெயரில் பணத்தின் பின்னாடி பயணித்து, வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள், என்ற மெசஜை ரசித்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்
#dinasarimoviereview
Comments (0)
Add Comment