வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி என பல சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில்ஜெகவீர்,மீனாட்சிகோவிந்தராஜன்பாலசரவணன், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 2K லவ் ஸ்டோரி
கதை
சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்) – மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கி கல்லூரி, அதற்குப்பின் தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும், அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே பழக ஒரு கட்டத்தில் பவித்ரா என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார். பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நட்பில் கார்த்திக் நெருங்கி பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால், மோனிகாவுடனான நட்பை முறித்துக் கொள்ளும் படி கார்த்திக்கிடம் கூறுகிறார் பவித்ரா. ஆனால், கார்த்திக் மோனிகாவின் நட்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி, பவித்ராவுடனான காதலை பிரேக் அப் செய்கிறார். இதை அறிந்த மோனிகா, கார்த்திக் – பவித்ரா இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, இந்த சமயத்தில் கார்த்திக் பவித்ரா பைக்கில் சொல்லும்போது விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா.தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. இதன்பின், கார்த்திக் – மோனிகா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. தான் உண்மையான நண்பர்கள் என அவரவர் பெற்றோரிடம்கூற இருவருக்கும் அண்ணன் தங்கை உள்ள வீட்டில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அண்ணன், தங்கை உள்ள வீட்டை தேடுகின்றனர். இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது இறுதிவரை நண்பரகளாகவே இருந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக ஜெகவீர் முடி சிறப்பாகநடித்துள்ளார். கதாநாயகியாக மீனாட்சி கோவிநாதராஜன்அழகாலும் நடிப்பாலும் கவர்கிறார பவித்ராவாக நடித்தவரின் நடிப்பும் அருமை. பால சரவணன், ஜி.பி முத்து, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.வி.எஸ். ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.பாலசரவணன், டி. இமானின் பாடல்கள் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல் தான், என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு, ஒரு ஆணும், பெண்ணும் இறுதிவரை நண்பரகளவே இருக்கலாம் என்ற கருத்தை எல்லோரும் பேமிலியுடன் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பாராட்டுக்கள்