பிரித்வி போலவரபு தயாரிப்பில் தன்ராஜ் இயக்கத்தில் சிவபிரசாத் யானவா கதையில் தூர்கா பிரசாத் ஒளிப்பதிவில் அருண் சில்லிவேரு இசையில் சமுத்திரகனி, தன்ராஜ், மோக்சா, ஹரி உத்தமன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்.
கதை
சமுத்திரக்கனி தன்மகனே டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் மகன்தன்ராஜ் சரியாக படிக்காமல் பல தவறுகளை செய்து கொண்டிருக்கிறார். மகனின் செயல் பிடிக்காததல் மகன் தன்ராஜ் திருமணத்திற்கு பார்த்த பெண்ணிடம்என்மகனைகல்யாணம்பண்ணவேண்டாம்அவன் தறுதலை என்றுசொல்லி தடுத்து விடுகிறார். தொழில் செய்து வளரட்டும் என்று 5 லட்சம் பணம் கொடுக்கிறார் அந்த பணத்தையும் சூதாட்டத்தில் தொலைத்து விடுகிறார். தன்ராஜ் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல மோக்சா தன்ராஜ் காதலல ஏற்க மறுக்கிறார். இப்படியிருக்கும் சூழ்நிலையில் தன் தந்தை இறந்தால்தான் அவரது வேலையும் பணமும் சொத்தும் தனக்கு கிடைக்கும் நிம்மதியாக வாழலாம் என்று கருதி லாரி டிரைவர் ஹரி உத்தமன் முலம் தன் தந்தை சமுத்திரக்கனியைஆக்ஸிடென்ட் செய்துகொலைசெய்ய திட்டம் போடுகிறார். தன்ராஜ் போட்ட திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே ராமம் ராகவம் படத்தின் மீதிக்கதை.
சமுத்திரக்கனி தந்தையாக நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டரகவே வாழ்ந்திருக்கிறார்.சமூத்திரக்கனியின் மகனாக தன்ராஜ் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். சமுத்திரக்கனியின் மனைவியாக பிரமோதினி சிறப்பாக நடித்துள்ளார். தன்ராஜின் காதலியாக மோக்சாவின் நடிப்பும் அருமை. அருண் சில்லிவேரு இசையில் பிடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. துர்கா பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
தந்தை மகன் உறவை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்இயக்குநர் நடிகர் தன்ராஜ். வாழ்த்துக்கள்.