நிழற்குடை திரைவிமர்சனம்…

நடிகை தேவயானி நடித்து வெளிவந்திருக்கும் நிழற்குடை ஒரு குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளின் ட்ராமா.

இந்தத் திரைப்படத்தில் இரண்டு இளம் தம்பதிகள் மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் எதிர்ப்பை எதிர்த்து தனியாக வீடு எடுத்து தங்குகிறார்கள்’ அவர்கள் நல்ல ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதால் காலை 9:00 முதல் இரவு 9 மணி வரை வேலைக்கு செல்கிறார்கள் பல லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இவர்கள் காசா கார்டன் என்னும் ஒரு பிளாட்டில் வசதியான வீடை விலைக்கு வாங்கி அதில் தங்குகிறார்கள் . தன் மகளை பகலில் கவனித்துக் கொள்ள ஒரு கேர் டேக்கர் நியமிக்கிறார்கள்,அந்தப் பெண்ணோ இளம் பெண் திருமணமாகாதவள் தன் காதலனை பிளாட்டுக்கு வரவைத்து காமலீலைகள் செய்கிறாள் இதற்காக அந்த சிறுமிக்கு தூக்கம் மருந்தை கொடுத்து தினமும் படுத்து தூங்க வைக்கிறாள்,ஒரு நாள் அந்த பிளாட்டின் வாட்ச்மேன் இவை அனைத்தையும் அந்த கணவன் மனைவிக்கு சிசிடிவி கேமரா புட்டேஜ் உடன் சொல்லிவிட அந்தப் பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள்,இந்த இளம் கணவன் மனைவிக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் தன் மகளுடன் அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்று தீராத ஆர்வம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க இப்பொழுது இந்த மகளை வீட்டில் பார்த்துக் கொள்வது யார் என்னும் பிரச்சினை துவங்குகிறது,அந்த நேரத்தில் தமிழக அரசால் ஒரு முதியோர் அனாதை இல்லம் நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கு சிறந்த விருது கிடைக்கிறது அந்த பெண் தான் நடிகை தேவயானி. இந்தப் பெண்ணை நம் குழந்தையை பார்த்துக் கொள்ள அமைத்துக் கொடுத்தால் நம் மகள் நன்றாக வளருவார் என்று தேவையான இடம் அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு கணவனும் மனைவியும் என் மகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்ல தேவையானையும் அந்தப் பெண் குழந்தை தனது இறந்த தன் குழந்தையைப் போல் இருப்பதால் முழு பாசத்தையும் அந்த குழந்தையின் மீது வைத்து அவளை பார்த்துக் கொண்டு வளர்க்கிறாள்.அந்தக் குழந்தையும் தன் அப்பா அம்மாவிடம் கிடைக்காத அன்பு இந்த பெண்ணிடம் கிடைப்பதால் தேவயானையை அம்மா என்றே அழைத்து அன்புடன் பாசம் காட்டுகிறாள்,ஒரு நாள் அந்த குழந்தை காணாமல் போய்விடுகிறது இப்பொழுது இந்த குழந்தையை கடத்தியது யார் அந்த பிளாட்டில் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சைக்கோ இளஞ்சனைப் போல் இருக்கும் ஒருத்தன் கடைசிலானா இல்ல தாய் தந்தையின் குடும்பத்தினர் கடத்தினார்கள் அந்த குழந்தை மீண்டும் கிடைத்ததா போலீசார் விசாரணை எப்படி செல்கிறது என்பதை தேவையான என்னும் அந்த வளர்ப்பு தாய் போலீசாரின் உதவியுடன் கண்டுபிடிக்கிறாள் குடும்பத்தை ஒன்றாக சேர்க்கிறாள் இதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இதில் வனப்புத்தாயாக வரும் தேவயானி நடிப்பு பார்க்கும் பார்வையாளர்களை கண்கள் குளமாக்க செய்கிறது. அருமையான திரைக்கதை சிறந்த நடிப்பு கதாபாத்திரங்கள். மொத்தத்தில் இது ஒரு ஃபேமிலி டிராமா கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குடும்ப திரைப்படம், உறவுகளால் முக்கியம் ஆடம்பர வாழ்க்கை முக்கியமல்ல என்பதை விளக்கும் அருமையான திரைப்படம்.

#NIZHARKUDAI
Comments (0)
Add Comment