பரமசிவன் பாத்திமா சினிமா விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்துக்கள் சுப்பிரமணியபுரத்திலும், கிருஸ்துவர்கள் யோகாப்புரத்திலும், முஸ்லிம்கள் சுல்தான் பேட்டையிலும் மதத்தால் பிரிந்து வாழ்கின்றனர். விசேஷ நாட்களில் இந்த பிரிவு மக்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு சண்டை கைகலப்பு நடந்து கொண்டே இருக்கிறது.இந்த சமய​த்தில் இரு பிரிவுகளான இந்துக்கள் திருமணத்திலும் மற்றும் கிருஸ்துவர்கள் திருமணத்திலும் மணமகன்கள் இரவில் அடர்ந்த காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை விசாரிக்க தனிப்படையுடன் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் காட்டிற்குள் முகாமிட்டு தங்குகிறார். கிராமத்தில் இரு மதங்களின் மக்களையும் விசாரிக்கும் போது எந்த வித தடயங்களும் கிடைக்காமல் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இந்த கொலைகளை செய்யும் விமல் மற்றும் சாயாதேவியை யாரும் காட்டிக் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்த கொலைகளால் இரு பிரிவினருக்குமிடையே மோதல்கள் அடிக்கடி நடக்கிறது. இறுதியில் இந்த கிராமத்தில் மதத்தால் ஏன் பிரிவினை நடந்தது? விமல் மற்றும் சாயாதேவி ஏன் இந்த கொலைகளை செய்கிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? இவர்களை போலீசால் ஏன் பிடிக்க முடியவில்லை? காரணம் என்ன? என்பதே படத்தின் முடிவு.

விமல் மற்றும் சாயாதேவி சிறு வயது நண்பர்களாக, வளர்ந்த பிறகு இவர்களின் பிரிவால் ஏற்பட்ட பாதிப்பு மதத்தின் பேரால் அனுபவித்த கொடுமைக்கு பழி வாங்கும் ஆவிகளாக வந்து போகிறார்கள்.

பாதரியராக எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன், அண்ணனாக வில்லனாக களமிறங்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகமார், துபாய் மாப்பிள்ளையாக கூல்சுரேஷ், சாமியாராக அருள்தாஸ்,அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா,விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை ஆகியோர் படத்தில் முக்கிய பங்களித்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

இசை: தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், கலை இயக்குனர்: வீராசமர், எடிட்டர்: புவன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் சாதிக்கலவரம், மதமாற்றம் கதைக்களத்தின் முக்கிய தருணங்களுக்கு த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்திருக்கின்றனர்.

கிராமத்தில் நடக்கும் மதமாற்றம் எப்படி குடும்பத்தை பிரிக்கிறது, அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது, பிரிவினையை ஏற்படுத்துகிறது, தோற்றத்தால் மதம் மாறினாலும், மனதால் மாறாமல் தவிக்கும் சிலருக்கு ஏற்படும் துன்பங்களை நேர்த்தியாக கையாண்டு காதல் கலந்து திகிலுடன் உணர்வுபூர்வமான வசனங்கள், வினோதமான கிராமத்து பிரிவினைகள் என்று மதத்தை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

மொத்தத்தில் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கும் பரமசிவன் பாத்திமா மதமாற்றத்துடன் திகில் கலந்த த்ரில்லர்.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பரமசிவன் பாத்திமா படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்

இதில் விமல், சாயாதேவி,எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகமார், கூல்சுரேஷ், அருள்தாஸ்,ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா,விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், கலை இயக்குனர்: வீராசமர், எடிட்டர்: புவன், தயாரிப்பு நிர்வாகி: டி.முருகேசன், நடன இயக்குனர்: லீலாவதி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பாளர்: ஹரிஷ்.கே.அன்பு, ஒப்பனை: ஜி.சுரேஷ்குமார், உடை: ரஞ்சித், ஸ்டில்கள்: கே.ராஜ், பிஆர்ஒ: நிகில் முருகன்

#Paramasivan Fathima movie review
Comments (0)
Add Comment