பறந்து போ சினிமா விமர்சனம்

அப்பா மகன் உறவை மையமாகக் கொண்ட இந்த படம்.
பரபரப்பான சிட்டியில் தங்களுடைய குடும்ப உறவுகளின் மதிப்பை அலசுகிறது இந்த படம்.
(பிளாட் சிஸ்டத்தில்) அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்கும் கோகுல் கிரேஸ் என்னும் இரு வேறு மதங்களை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய எட்டு வயது பிடிவாரம் பிடிக்கும் மகன் அன்புடன் வாழும் ஒரு சராசரி குடும்பம். கோகுல் எப்படியாவது ஒரு கடையை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவன், மனைவி கிரேஸ் ஒரு சேலை கடை வைத்து அதன் மூலம் வரும் பணத்தில் தன் மகனுக்கு உயர்ந்த படிப்பை தர வேண்டும் பள்ளியில் கோடை வகுப்புக்கு தேவையான எல்லா வகுப்புகளையும் சேர்த்து விடுகிறார்.
மகனை வீட்டினுள் வைத்து கிரில் கேட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலையைத் தேடி செல்கிறார்கள்.
பூட்டப்பட்ட வீட்டினுள் மடிக்கணினியில் ஆன்லைன் கிளாசுகளை கவனித்துக் கொண்டிருக்க அவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் போர் அடித்து விடுகிறது. நண்பர்களுடன் விளையாட வேண்டும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
அதேபோல கோகுலும் இந்த பரபரப்பான சிட்டி வாழ்க்கையை மறந்து தனிமையில் இருக்க விரும்புகிறான். மகனும் அப்பனும் வெளியுலகை காண ரோட்டில் பறக்கிறார்கள் மனைவியும் பணம் பணம் என்று இல்லாமல் கணவன் மகனுடன் அவ்வாறான புதிய உறவுகளை தேடி ஊர் ஊராக செல்கிறார்கள்.
சிறுவன் அம்புவின் இம்சையான அதே நேரத்தில் சந்தோஷமான வாழ்க்கையை நினைத்து பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள் புதிய உறவுகளும் அவர்களுக்கு கிடைக்கிறது மகன் அன்பு வெளி உலகில் ஐக்கியம் ஆகிறான். இவ்வாறு பறந்து பறந்து சென்று கொண்டிருக்கும் இவர்கள் உலகைப் புரிந்து கொண்டு தன் மகனின் சந்தோசத்தை தன் சந்தோஷமாக ஏற்று பரப்பது தான் இயக்குனர் ராமின் பறந்து போ இந்த திரைப்படம்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.

#Paranthu Po
Comments (0)
Add Comment