குற்றம் புதிது திரை விமர்சனம்

அசிஸ்டன்ட் கமிஷனர் ஓட பொண்ணே காணவில்லை என்று

சென்னையில் இருக்கும் மொத்த போலீசும் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்காங்க

அப்போ புட் டெலிவரி பண்ற ஒரு பையன் கமிஷனர் ஆபீஸ் கே போய் நான் தாங்க அந்த பொண்ண கடத்தினேன் அப்படின்னு சொல்றான்.

கொன்னுட்டேன் என்று சொல்லி சரணடைகிறான்,அசிஸ்டன்ட் கமிஷனர் கேஸ் என்பதால் டைரக்டா கமிஷனரே இன்வால் ஆகுறாங்க,கமிஷனர் அந்த பையன விசாரிக்கும் போது அந்தப் பையன் சொல்கிறான் நான்  டெலிவரி பண்ணிட்டு வந்துகிட்டு இருக்கும்போது இந்த பொண்ணு என்னிடம் லிப்ட் கேட்டுச்சு கெஞ்சுடுச்சு சரின்னு அந்த பொண்ண பைக்ல ஏத்திக்கிட்டு போயிட்டு இருக்கும்போது எதிர்பாராத விதமா பைக் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு,நான் சுதாரிச்சுட்டு எழுந்திரிச்சு பார்க்கும்போது  பொண்ணு எந்திரிக்கவே இல்ல தட்டிப் பார்த்தா செத்துப் போய் கிடக்குது,

தலையில அடிபட்டு இருந்தது நான் என்ன பண்றதுனே தெரியாம அந்த பாடிய என் வண்டியிலேயே எடுத்துக்கிட்டு என் வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டேன்,

நான் செய்யாத தப்புக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த பொண்ணோட கழுத்துல ஒரே வெட்டு வெட்டினேன் சார் அப்பதான் தெரியுது அந்த பொண்ணு இன்னும் சாகலன்னு கை கால் எல்லாம் துடிக்க ஆரம்பிச்சு இருக்கு சார்,அப்புறமா கொஞ்ச நேரத்தில் அடங்கிடுச்சு சரின்னு கை கால் எல்லாம் துண்டு துண்டா வெட்டி பாத்ரூம்ல போட்டு விட்டேன் சார் கொஞ்சம் பாடி எடுத்து மெரினா பீச் பக்கத்துல போட்டுட்டேன் சார்.

இப்படி வெகுளித்தனமாக சொல்லிக் கொண்டிருக்கும்போது கமிஷனர் குறுக்கிட்டு ஒன்று தானே என்கிறார்,

இல்ல சார் ஸ்கூல் படிக்கும்போது கணக்கு டீச்சர் நான் தான் சார்  பக்கத்துல ஒரு மயானம் இருந்து அங்க போய் புதைத்து விட்டேன் சார்.

கமிஷனர் அப்புறம் என்று கேட்க அப்புறம் என்ன சார் ஹாஸ்டல்ல படிச்சேன் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு பெஸ்ட் பிரின்ட் இருந்தான் சார் அவனுக்கும் எனக்கும் தகராறு ஆயிடுச்சு அப்ப கைல இந்த பீர் பாட்டில் எடுத்து ஒரே போடா போட்டேன் சார் அவனும் செத்துட்டான் என்று சொல்ல…

அவனையும் பக்கத்துல இருக்குற ஒரு காட்டுல பொதைத்து விட்டேன் சார் என்று சொல்ல கமிஷனர் ஷாக் ஆகி நிற்கிறார்.

நீங்க போய் தியேட்டர்ல பாருங்க எடிட்டிங் அமோகமாக இருந்தது ஒளிப்பதிவு பிரமாதம் திரைக்கதையில் நேர்த்தி அருமையான கட்டிங்ஸ் சூப்பர் கமலக்கண்ணன்

இந்தப் படத்தோட இசையை சொல்லனும்னா சூப்பரான ஒரு பிஜிஎம் அருமையான ரீ ரெகார்டிங்.

ஒரு பக்கம் ரத்தம் தெரிகிற காட்சிகள் அந்த இடத்துல வித்தியாசமான ஒரு RR போட்டு அசத்தியிருப்பார் இது ஒரு சிலருக்கு பிடிக்கலாம் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போலாம் உங்க கருத்தை சொல்லுங்க.

மத்தபடி தருண் விஜய் என்னன்னு சொல்ல அவர் எக்ஸ்பிளைன் பண்ண விதம் அப்பப்பா அடுத்து அந்த கொலை செய்யறதுக்கு முன்னாடி ஒரு கொரில்லா மாறி ஒரு கான்செப்ட் பண்ணி இருப்பாரு இது ஆல்ரெடி பிரஸ்மீட்டில் கூட சொன்னாரு இதுக்கு நான் மூணு மாசம் டிரெய்னிங் எடுத்து இருக்கேன்என்று சொன்னார் ஆனா சீனா பாக்கும்போது கொஞ்சம் தோல்வா இருந்தது அதை கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம் மத்தபடி படம் அருமையான திரைக்கதை அருமையான வசனம் காட்சிப்படுத்தல் சூப்பர் எடிட்டிங் சொல்லவே வேணாம் அருமையா பண்ணி இருக்காங்க மொத்தத்தில் இந்த திரைப்படம் பார்க்க வேண்டிய படம்.

 

#Kuttram Puthithu movie review#குற்றம் புதிது திரை விமர்சனம்
Comments (0)
Add Comment