படையண்டம் மகாவீர சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் வா. கௌதமன்.  வி கே .ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ் .எஸ். கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா.

இதில் வா. கௌதமன் ,மஞ்சுர் அலிகான் ,சரண்யா பொன்வண்ணன், பூஜிதா ,சமுத்திரக்கனி, பாகுபலி பிரபாகர் ,மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன் ,இளவரசு, சாய் தீனா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ரெட்டின் கிங்ஸ் லீ, தமிழ் கௌதமன் ,மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் ;ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன் ,இசை ஜிவி பிரகாஷ் குமார், பின்னணி இசை C.S, வசனம் பாலமுரளி வர்மா, இணை தயாரிப்பு வா. கௌதமன்,  ஈ. குரளமுதன், யு எம் மகாதேவன், கே பாஸ்கர் ,கே .பரமேஸ்வரி. தமிழக வெளியீடு சுஷ்மா சினியாஸ் ,ஜி. என். அழகர் மக்கள் தொடர்பு ;நிகில் முருகன்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் எல்லையில் …வீரப்பனுக்கு உதவி செய்தவரை என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி ராம்குமார் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதிக்கு அனுப்பப்படுகிறார், அங்கே அதிக செல்வாக்கு மரியாதை அதிகாரம் மிக்க காடுவெட்டி குரு என்பவரை பற்றி சக போலீசாரிடம் தெரிந்து கொள்கிறாள். காடுவெட்டி குரு பற்றி  கதைக்களம் ஆரம்பம் ஆகிறது. பள்ளியில் படிக்கும் மாணவன் காடுவெட்டி குரு , தந்தை சமுத்திரக்கனி அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து பெரிய மனிதராக வலம் வருகிறார் .இவரின் வளர்ச்சியை பிடிக்காத ஆடுகளம் நரேன் சமுத்திரகனியிடம் வீண் சண்டையை இட்டு கொலை செய்து விடுகிறார். இதை நேரில் பார்க்கும் சிறுவன் குரு ,வளர்ந்து பெரியவனாகி தந்தையை கொன்றவரை தலையை துண்டித்து பழிவாங்கி சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த பிறகு தனது சமூகத்தை மட்டும் இன்றி அனைத்து சமூகத்தையும் சமமாக கருதி ,எந்தப் பிரச்சனை என்றாலும் மக்களுக்காக எதையும் செய்ய தயங்காத ஆளுமை படைத்த ஒரு தலைவராகவும் பாதுகாவலராகவும் மாறுகிறார். அவரது அசுர வளர்ச்சி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்துகிறது .அரசாங்க அதிகாரிகள் உயர் சாதியினர் அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு எதிராக குருவின் கடினமான பயணம்  தாக்கத்தை ஏற்படுத்தி அனைத்து மதத்தினர் காடுவெட்டி குருவின் பின்னால் நிற்பது, அவர்களைப் பாதுகாப்பதே குறிக்கோளாக இருக்க இதனால் குருவின் உடல்நிலை பாதிக்கப்பட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது,

இப்படி மக்களுக்காகவும் ஊருக்காகவும் பாடுபட்ட குருவின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் படத்தின் மீதி கதை, இந்தப் படத்தில் காடுவெட்டி குருவாக நடித்த வா. கௌதமனின் நடிப்பு பாராட்டுக்குரியது, கண்கள் சிவக்க வசனங்கள் கொப்பளிக்க ,ஸ்டைல் நடனம் ,என்று விஜயகாந்தை ஞாபகப்படுத்துகிறார். குருவின் தந்தையாகவும் தாயாகவும் நடித்த சமுத்திரகனி சரண்யா பொன்வண்ணன் இருவரது நடிப்பும் மெச்சக்கூடியது.மனைவியாக நடித்த பூஜிதா வெறும் நடன காட்சிக்கு மட்டும் வந்து செல்கிறார், பெரிய நடிப்பு என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.காடுவெட்டியின் சிறு வயது நடிகராக வரும் தமிழ் கௌதமன் அருமையான ஆக்சன் கலந்த நடிப்புத், திறனுக்கு ,ஒரு சபாஷ்.

மற்றபடி இந்த படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது ,மொத்தத்தில் படம் சூப்பர். திரையரங்களில் காணுங்கள்.

 

 

#padai yaanda maaveera review
Comments (0)
Add Comment