தனுஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை.
ஒரு சின்ன கிராமத்துல இட்லி கடை வைத்திருக்கும் (ராஜ்கிரண்) சிவனேசன் காலையில மூணு மணிக்கு எழுந்து கடையைத் திறந்து மாவாட்டி தான் கையால சட்னி சாம்பார் எல்லாம் செஞ்சு அந்த கிராமத்து மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரு சின்ன வியாபாரி, அதுலயும் பள்ளிக்கூட படிக்கும் மாணவர்களுக்கு இலவசம் .அப்படி இருக்க தன் மகன் தனுசும் அப்பாவுக்கு துணையாக இருக்கிறார், மாவாட்டும் போது எவ்ளோ கஷ்டத்த அனுபவிக்க வேணாம்… நாம கிரைண்டர் யூஸ் பண்ணலாம் அதை நான் வாங்கி வரேன் அப்படின்னு சொல்லும்போதும் சிவனேசன் கை பக்குவம் ரொம்ப முக்கியம் என்று தட்டி கழிக்கிறார், இப்படியே ஒரு குண்டு சட்டியில குதிரை ஓட்டக்கூடாது என்று நான் சென்னைக்கு போறேன் அங்க கேட்டரிங் படிச்சிட்டு வெளிநாட்டுக்கு எங்கேயாவது சென்று இந்த சமையல் கலையில் முன்னேறி நாமும் வசதி வாய்ப்போடு இருக்கலாம் என்று தந்தையிடம் சொல்ல சிவதேசனும் நம்ம ஊரு, நம்ம குல சாமி இது எல்லாம் விட்டுட்டு நான் வரமாட்டேன் என்று சொல்லும்போது நான் செல்கிறேன் என்று சென்னைக்கு கிளம்புகிறான். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது சென்னையில் இருந்து பேங்காக்கில் பெரிய தொழிலதிபராகவும் ஹோட்டல் அதிபராகவும் இருக்கும் சத்தியராஜ் சந்திக்கிறார் .இந்தத் தொழிலில் தனுஷின் ஈடுபாடும் நேர்மையும் சத்யராஜுக்கு பிடித்துப் போக தன் மகளையே கல்யாணம் செய்து வைக்கும் அளவிற்கு ஒத்துக் கொள்கிறார், ஆனால் சத்யராஜின் மகன் அருண் விஜய் ஒரு சாதாரண வேலைக்காரனா வந்தவளுக்கு பணம் கொடுக்கலாம், வேலை கொடுக்கலாம் ,ஆனால் பொன்னையா கொடுக்கிறது என்று கோபப்படுகிறார் ,அருண் விஜயின் ஈகோ பிரச்சினையால் தனுசை பிடிக்காமல் தனுஷ் மீது கோபம் கொள்கிறான். சத்யராஜ் தன் மகளிர் திருமணத்தில் மும்மூலமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்க திருமண தேதி அறிவிக்கிறார் இதற்காக பெரிய பெரிய வெளிநாட்டு தொழிலதிபர்களை அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுகிறார் ,இந்த நிலையில் கிராமத்தில் இருக்கும் ராஜ்கிரன் மரணம் அடைகிறார் தந்தை மரணத்தை காண சத்யராஜிடம் சொல்லிவிட்டு திருமணத்துக்குள் வந்துவிடுகிறேன் என்று தனுஷ் கிராமத்துக்கு புறப்படுகிறார், இந்த நிலையில் தனுஷின் தாயும் இறந்து விடுகிறார், தன் தாய் தந்தைக்கு அவர்களுக்கு பிடித்தார் போல் அவர்களை வாழ வைக்க முடியவில்லை என்று தனுசு தன் பாரம்பரிய இட்லி கடையை நடத்துவதாக முடிவெடுக்கிறார். இதனால் வெளிநாட்டு திருமண காரியங்கள் தடைபடுகிறது, சத்யராஜ் கோபப்படுகிறார் ,அருண் விஜய் அந்த கிராமத்துக்கே வந்து தனுசை ஒழித்துக் கட்டி ஈகோ பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். அவர்களுக்குள் நடக்கும் மோதல் இந்த திருமணம் நடந்ததா இல்லை அதுல கிராமத்தில் இருக்கும் தன் முறை பெண்ணோடு திருமணம் நடந்ததா என்பதுதான் மீதி கதை.
இதிலே தனுஷின் நடிப்பு மிகவும் பிரமாதம் ,இதில் வில்லனாக தோன்றும் அருண் விஜயின் நடிப்பு சூப்பர்.கிராமத்து பெரியவராக இட்லி கடை நடத்திக் கொண்டிருக்கும் சிவனேசன்( ராஜ்கிரன்) சொல்லவே வேண்டாம் நடிப்பு அசுரன்.
சமீப காலங்களில் அடி வெட்டு குத்து ரத்தம் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு நேட்டிவிட்டி சப்ஜெக்ட் பாராட்டக் கூடியது… இதற்கு தனுசை பாராட்டியாக வேண்டும். இந்த படத்தின் இசை ஜிவி பிரகாஷ் அருமையாக நம்மை கிராமத்து சூழலுக்கே அழைத்து செல்கிறார்.
முக்கியமாக தனுஷ் கிராமத்து இளைஞனாக இருக்கும்போது காட்டும் நடிப்பும் வெளிநாட்டில் சத்தியராஜின் மேனேஜராக கோட் சூட்டோடு விடுக்காக வரும் இடங்களிலும் நடிப்பில் மின்னுகிறார்.
இளவரசு தன் குடும்பத்தை பார்க்க கிராமத்துக்கு வரும்போது மனைவி குழந்தைகள் அனைவரையும் அன்புடன் அரவணைக்கிறார் தான் பெற்ற தாய்க்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்னும்போது நம் கண்களில் கண்ணீர் துளிகள்.
துடித்துடிப்பாக நடித்திருக்கும் நித்யா மேனன் கலகலப்பான காட்சிகளிலும் …சோகமான காட்சிகளிலும் அருமையாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த படம் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கக்கூடிய அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் தனுஷ்.