bishap shetty இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா chapter 1,
காந்தாரா chapter 1 இந்த கதை பல நூற்றாண்டுகளை கடந்து நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த கதை காந்தாராவுக்கும் பாங்க்ரா கதைகளுக்கும் இடையில் நடக்கும் அதிகார நிகழ்வை காட்டுகிறது,
அழகான அடர்ந்த வனப்பகுதி காந்தாரா ,அங்கே இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை பாதுகாக்கும் ரிஷப் செட்டி அவருடைய வம்சாவழியினர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஈஸ்வரத் தோட்டத்தில் விளையும் வாசனை திரவியங்கள் விலகு, ஏலக்காய் ,போன்ற பொருட்களை அருகில் உள்ள பாங்குரா வில் உள்ள துறைமுகத்தில் விற்க முயற்சி எடுக்கிறார்கள். அந்த கோபத்தில் பாங்க்ரா மன்னர் எப்படியாவது காந்தாராவில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்று நயவஞ்சகம் செய்கிறார், இதுல அந்த மன்னருக்கு ஒரு குடிகார மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள், மகள் எப்படியாவது காந்தாரா பிஷப் செட்டியை மென்மையான அணுகு முறையை பயன்படுத்தி மயக்க பார்க்கிறார் ,குடிகார இளவரசன் நயவஞ்சகத்தால் காந்தாராவை அபகரிக்க பார்க்கிறான், இந்த நிலையில் மந்திர தந்திரங்கள், சூனியங்கள் மூலம் ஈஸ்வரத் தோட்டத்தை அடைந்து விடலாம் என்று வேறொரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது ,இவர்கள் பாங்க்ரா பேராசையை தூண்டி காந்தாராவுக்குள் நுழைகிறார்கள் ,ஆனால் இளவரசர் கொல்லப்படுகிறார், இப்பொழுது இளவரசி அந்த சூனியக்கார கூட்டத்துடன் தந்திரம் செய்து ஈஸ்வரத் தோட்டத்தை நெருங்குகிறார்கள் ,இந்த நேரத்தில் சிவாவின் மீது தெய்வ சக்திகள் இறங்கி தும்சம் செய்கிறது.
எதிரிகள் காந்தாராவில் உள்ள ஈஸ்வரத் தோட்டத்தை அபகரித்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை. இந்தப் படத்தில் ரிஷப் செட்டி நடிப்பு பிரமாதம், திரை கதையில் ஒரு பிரம்மாண்டம், அருமையான கேமரா ஒர்க், ஆர்ட் டைரக்சன் சபாஷ் போட வைக்கிறது ,ஹாலிவுட்டுகளையே பார்த்து பிரமித்த நமக்கு தென்னிந்தியாவின் படங்களில் காந்தாரா சேப்டர்1 ரொம்ப அருமை. புலி . பன்றி என்று பல தோற்றங்களில் தோன்றும் தெய்வ சக்திகள் அருமையான ஃபேண்டஸி படம் என்று நிரூபிக்கிறது,
இந்தப் படத்தை குடும்பங்கள் அனைவரும் கண்டு ரசிக்கலாம் ஆனால் மக்களே இதை தியேட்டரில் பாருங்கள் அப்பொழுதுதான் அந்த பிரம்மாண்டம் நீங்களும் அனுபவிக்கலாம். வாழ்த்துக்கள் இயக்குனர் கதை ஆசிரியர் நடிகர் பிஷப் செட்டிக்கு வாழ்த்துக்கள்.