வேடுவன் web series review

இந்த web series A zee 5 OTT தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கு.

Kanna Ravi – Arunmozhi
Sanjeev Venkat – Aadhinadhan
Sravnitha Srikanth – Pallavi
Vinusha Devi – Shanthi
Rekha Nair – Yashoda
Lavanya – Vennila
Producer Name – SAGAR PENTELA
Production House – RISE EAST PRODUCTIONS
Director – PAVAN KUMAR
Screenplay – PAVAN KUMAR
Writer – PAVAN KUMAR
Background score – VIBIN BASKAR
Editor – SURAJ KAVEE
Cinematography – Srinivasan Devaraj

 

இந்தப் படத்தில் Kanna Ravi (அருள்மொழி ) திரைப்பட நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவருடைய படங்கள் சரியாக போகாததால் ஒரு நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்க அருள் மொழிக்கு திரைத்துறையில் ஒரு கெட்ட பெயர் உண்டு, இவன் கதையிலும் கதாபாத்திரங்களும் மூக்க நுழைப்பான் என்று. இதற்கு அருள்மொழி சொல்லும் விளக்கம் நான் முழு ஈடுபாடுடன் நடிப்பேன்.. உண்மைக்கு மாறாக நடிக்க மாட்டேன் என்று சொல்லுவான். அப்பொழுது அருள் மொழியின் கனவிலும் அவனுடைய நினைவிலும் ஒரு போலீஸ் கதை நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளர் மூலமாக நிறைவேறுகிறது கதையைக் கேட்டவுடன் ஹீரோவுக்கு பிடித்து விட படத்தை ஒத்துக் கொள்கிறார்.

கதையின் துவக்கத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருள்மொழி அண்டர் கிரவுண்டில் கமிஷனரின் ஆணைக்கிணங்க மப்டி உடையில் துப்பு துலக்குகிறார். சென்னையை ஆட்டிப்படைக்கும் ஒரு ரவுடி அவன் மேல் கொலை குற்றங்கள் திருட்டு குற்றங்கள் என்று ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன, அந்த ரவுடியை என்கவுண்டர் செய்ய அருள்மொழி மூன்று மாத காலம் சென்னை கடற்கரையில் பிச்சைக்கார வேஷத்தில் இருக்கிறான். அவ்வாறு பிச்சைக்கார வேஷத்தில் இருக்கும் அருள் மொழி  அங்கே உடற்பயிற்சி செய்ய வரும் அந்த பிரபல ரவுடி அவனுடைய அடியாட்கள் பிச்சைக்காரன் என்று நம்புகிறார்கள், இந்த சமயத்தில் கமிஷனரிடம் சொல்லிவிட்டு துப்பாக்கியால் நேரடியாக நெற்றிக்கோட்டில் சுட்டு சாகடிக்கிறார், அங்கிருந்து தப்பி  சிகை அலங்காரம் செய்து கொண்டு அவருடைய குடும்பத்திற்கு திரும்புகிறான் அருள்மொழி. இந்த ஹீரோ அருண்மொழிக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு இன்றைய நாள் என்ன நடந்தது என்பதை தன் மனைவியிடம் சொல்லி அவளுடைய கருத்துக்களையும் கேட்பாள், இவளுக்கு பள்ளி படிக்கும் சிறு மகனும் உள்ளான். கமிஷனரின் பாராட்டைப் பெற்ற அருள்மொழி அடுத்த assignment க்கு ரெடி ஆகிறார்.. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடியின் மனைவியாக ரேகா நாயர் யசோதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரவுடி பொம்பளையாக ஒரு குவாட்டர் மது பாட்டலை அப்படியே குடிக்கும் ஒரு arrogant லேடியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். தன் கணவனை கொன்ற அந்த போலீஸ்காரனை சாகடிக்கும் வரை தன் கணவனின் பிணத்தை எடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார், போலீசாரின் மிரட்டலுக்கு அடிபணிந்து பிணத்தை எடுக்க ஒத்துக் கொள்கிறாள். அடுத்த assignment போலீஸ் கமிஷனரிடம் இருந்து அருள்மொழிக்கு வருகிறது. சின்ன வயதில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன் பெரியவனாகி ஒரு ரவுடியாக ஆளால் ஊருக்கும் ஊர் மக்களுக்கும் நல்லவனாக வேஷம் போட்டு வாழ்ந்து வரும் சஞ்சீவ் வெங்கட் (ஆதிநாதன்) கேரக்டரில் விளையாடியிருக்கிறார். 40க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் ஆதிநாதன் அந்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் பள்ளிக்கூடம் மாணவர்களுக்கும் தெய்வமாக காட்சி தருகிறார். அந்த ஆதிநாதனை என்கவுண்டர் செய்ய அருள்மொழி அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டர் ஆக சேர்ந்து சந்தேகம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இந்த நிலையில் ஆதிநாதனின் மனைவியாக வரும் (வினிஷா தேவி )சாந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவள் அருண் மொழியின் முன்னாள் காதலி படிக்கும் போது ஏற்பட்ட காதல் நடுவில் பிரிந்து விடுகிறார்கள், இப்பொழுது ஆதிநாதனின் மனைவியாக நடித்திருக்கிறார் ,இவர்கள் சந்திக்கும் வேளையில் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். சாந்தியின் வீட்டிற்கு வரும் அருண்மொழி நேரம் பார்த்து ஆதிநாதனை என்கவுண்டர் செய்ய காத்திருக்கிறார், கடைசியில் ஆதிநாதனை சுட்டு வீற்றினானா இல்லையா என்பதுதான் மீதி கதை. இந்த வெப் சீரியஸில் விறுவிறுப்பு குறையாமல் அருமையாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் பவன் குமார். கண்ணா ரவியின் நடிப்பு பிரமாதம் ,சஞ்சீவ் வில்லனாக இருந்தாலும் ஜென்டில் ஆக எதார்த்தமாக நடித்திருக்கிறார். சினிமாபோட்டோகிராபி சீனிவாசன் தேவராஜ் அருமையான ஒளிப்பதிவு. மொத்தத்தில் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறையாமல் இந்த வெப் சீரியஸை zee5 ott தளத்தில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள் ,அனைவரும் கண்டு களியுங்கள்.

 

#வேடுவன் web series review
Comments (0)
Add Comment