இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் காந்தா. இந்த படம் ஒரு பீரியட் கதை படம் 1950 களில் நடக்கும் கதையாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள்,இந்த படம் சினிமாவுக்குள் சினிமா ஃபார்முலாவை கொண்ட படம், இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த கதையை தொடர்கிறார்கள் டைரக்டர் மிகப்பெரிய டைரக்டராக இருந்தாலும் கடந்த 10 படங்கள் தோல்வியால் மார்க்கெட் இழந்து மீண்டும் இந்த படத்தை துவக்குகிறார், ஆனால் ஹீரோவுக்கு தொடர்ந்து பத்து படங்கள் வெற்றி பெற்று வெற்றி ஹீரோவாகவும் ரசிகர் மத்தியில் பேரும் புகழும் அடைந்திருக்கிறார்,
ஹீரோ, ரசிகர்கள் என்னை கடவுளாக பார்க்கிறார்கள் அதற்கு ஏற்றார் போல் படம் பண்ணும்படி டைரக்டரிடம் சொல்கிறார்.
இப்படியாக டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் டைரக்டர் ஒரு கதாநாயகியை அறிமுகம் படுத்துகிறார்.
டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு ஹீரோயின். இதற்கு நடுவில் இந்த படத்தில் ஒரு பெரிய சம்பவம் நடந்து விடுகிறது அதை படத்தில் காணுங்கள்.
இந்தப் படத்தில் முதல் பாதையில் சுவாரசியமாக நகர்கிறது பல சீன்கள் சூப்பராகவே எடுத்திருக்கிறார்கள்,
அதற்கு முக்கியமான காரணம் துல்கர் சல்மான் நடிப்பும் சமுத்திரகனி நடிப்பும் என்று சொல்லலாம்,இந்தப் படத்தில் இருவரும் பிரமாதமாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் இருவரில் ஒருவர் சோடை போயிருந்தாலும் படம் ஒன்றுமே இல்லை.
இந்தப் படத்தில் ஹீரோயின் நடிப்பு மிகவும் சூப்பராக இருந்தது,
முதல் பாதையில் சூப்பராக நகர்ந்த திரைக்கதை இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்வதாக இல்லை விசாரணை அது இது என்று ஸ்லோவாக நகர்கிறது.
ராணா இந்த படத்துக்குள் வந்தவுடன் படம் கொஞ்சம் டிராமா டி காக உள்ளது.
படத்தின் வசனங்கள் நல்ல இருந்தது அதுவும் சமுத்திரகனி பேசும் வசனங்கள் பிரமாதமாக இருந்தது,ரசிகர்கள் அதிகப்படியாக 50 வருஷம் தான் இருப்பான் ஆனால் இந்த படம் 50 வருஷத்தையும் கடந்து நிற்கும் என்னும் வசனங்கள் கட் சொன்ன பிறகும் ஓவரா நடிக்காதடா என்னும் வசனமும் சூப்பர்,அடுத்து கேமரா ஒர்க் பிரமாதம்,
வித்தியாசமான கதை கொண்ட திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நல்லாவே இருக்கும்,படம் பார்க்கலாமா என்றால் பார்க்கலாம் பாராட்டுக்குரிய படத்தை தான் எடுத்திருக்கிறார்கள் ,அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள்.