அகண்டா 2: தாண்டவம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.

கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும்.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் :  போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :  ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

#the thaandavamNandamuri Balakrishna
Comments (0)
Add Comment