அர்னால்டாக டேனியல் பாலாஜி , இதில் தங்கமாக தன்யா எஸ் ரவிச்சந்திரன்,லிங்கமாக கே.பாக்யராஜ்,கமிஷனராக தமிழகம்,எம்எல்ஏவாக அருள்தாஸ், செல்வியாக ஸ்வேதாதோரத்தி ,ஜெனிபராக நயனா சாயி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு தொழிற்சங்கத் தலைவர் லிங்கம் (பாக்யராஜ்). அவரது மகளின் காதல் விஷயம் தெரிவதற்கு முன் மகள் காதலனுடன் செல்லும் போது விபத்தில் இறந்து விடுகிறார். அவள் இறப்பதற்கு முன் கர்ப்பமாக இருப்பதையறிவதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற போஸ்ட்மார்ட்டம் வெளிப்படுத்தும் முன் அவளது உடலை மீட்டெடுக்க வேண்டும் என்று லிங்கம் விரும்புகிறார். மகளின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் தரும்படி லிங்கம் அரசு மருத்துவர் (தான்யா) தங்கத்திடம் கேட்க நேர்மையான மருத்துவ அதிகாரியான தங்கம் மறுத்து விடுகிறார். இதனால் குடும்ப நண்பரும் காசிமேடு ரவுடி அர்னால்டிடம்(டேனியல் பாலாஜி) அவனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி போஸ்ட் மார்ட்டத்தை தடுத்து நிறுத்தச் சொல்கிறார். எனவே அர்னால்ட் தனது வழக்கமான மிரட்டல் பாணியில் லிங்கத்தின் மகளுக்காக தங்கத்தை மிரட்டி அடியாட்களை வைத்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறார். டாக்டர் தங்கத்தின் பிடிவாதம் இன்னும் பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. எதற்கும் அடி பணியாமல் எதிர்த்து மிரட்டல் விடுக்கும் தங்கம் அந்த பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து தருகிறார். இதனால் அர்னால்ட் கோபம் கொண்டு தங்கத்தை பழி வாங்க போலீஸ் கமிஷனரையே கொலை செய்தும், அவரது தங்கையை குறி வைக்கிறார். இறுதியில் அர்னால்ட் தங்கத்தின் குடும்பத்தை என்ன செய்தார்? அதன் பின் தங்கம் அர்னால்ட்டை எந்த விதத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் பழி தீர்த்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் திரையில் காணலாம்.
டேனியல் பாலாஜி. திமிர் பிடித்த வில்லத்தனத்தில் தீவரமாக மிரட்டி அனைவரையும் மிரள வைக்கும் தேர்ந்த நடிப்பு அற்புதம்.தன்யா ரவிச்சந்திரன் கொள்கை ரீதியான மருத்துவராக பிரகாசிக்கிறார். தன் நிலைபாட்டில் உறுதியுடன் இருந்து கடமையை செய்து ரவுடியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சாவல் விடும் தைரியம் நிறைந்த இரும்பு பெண்மணியாக அதிர வைத்துள்ளார்.ஜிப்ரானின் பின்னணி பதற்றத்தை அதிகரிக்கிறது.ஒரு தொழிற்சங்கத் தலைவரின் குடும்ப ரகசியத்தை அம்பலப்படுத்தக்கூடிய பிரேதப் பரிசோதனையில் தலையிடும் ஒரு மோசமான கேங்க்ஸ்டர் மற்றும் ஒரு கொள்கை ரீதியான மருத்துவருக்கு இடையேயான ஈகோ மோதலுடன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜேபி.வித்தியாசமான கோணத்தில் புதுவித முயற்சியுடன் இயக்கியிருக்கும் ஜேபி. வித்தியாசத்தை விரும்பும் மக்கள் இந்த படத்தை திரையரங்கில் கண்டிப்பாக பார்க்கலாம் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.