டைரக்டர் விஜயகுமார் டைரக்ஷனில் விஜய் மேரி யூனிவர்சல் மீடியாஸ் நிறுவனம் சார்பில் விஜய் மேரி தயாரித்து உருவாக்கி இருக்கும் கிராணி,
நடிகர்கள் வடிவுக்கரசி ,திலீபன், சிங்கம் புலி ,கஜராஜா எஸ் ,மற்றும் பலர்.
திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த பயத்தை உண்டாக்கும் உணர்ச்சி பொங்க அருமையான திரைகதை.கடைக்கோடி கிராமம் ஒன்றில் நடக்கும் மெய்சிலிர்க்கும் கதை,ஆரம்பமே ஒரு மர்மமான மரணத்துடன் தொடங்கி, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ஆழமான, இருண்ட ரகசியத்தை படிப்படியாக வெளிப்படுத்துகிறது.இதன் கூடவே, நகரத்தில் வாழ்ந்து வரும் ஒரு இளம் ஐ.டி. தம்பதியினர் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்து தங்குமாகின்றனர். அந்த வீட்டை சுற்றி ஒரு மர்மமான சக்தி இருப்பதை அவர்கள் அறியாமலேயே, அவர்களின் வாழ்க்கை அங்கு முற்றிலும் மாறுகிறது. அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர் மூதாட்டி ஒச்சை,ஒச்சை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை வடிவுக்கரசி, வயதும் அனுபவமும் கலந்து வெளிப்படும் மிரட்டலான நடிப்பை வழங்கி, படத்தின் ஆதார தூணாக நிற்கும் வடிவுக்கரசி தன்னுடைய நடிப்பாற்றலால் முழு படத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரது முகபாவனைகள், உடல் மொழி, கண் பார்வை எல்லாம் சேர்ந்து பயத்தை இயல்பாக உருவாக்க. அவரை உண்மையிலேயே அச்சமூட்டும் உருவமாக மாற்றிய விதம் பாராட்டுக்குரியது.பதற்றம் மெதுவாக உயர்ந்து, பார்வையாளரின் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் வகையில் திகில் ஊறுகிறது. ஒச்சை என்ற கதாபாத்திரம் ஆழமும் மர்மமும் கலந்த வகையில் எழுதப்பட்டிருப்பதால், அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் ஒரு அமைதியான அச்சத்தை உருவாக்குகிறது.உண்மையான இடத்தில் படமாக்கப்பட்ட பூர்வீக வீடு கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. அந்த வீட்டின் அமைப்பு, சுற்றியுள்ள இயற்கைச் சூழல், நிசப்தம் ஆகியவை கதையின் திகில் தன்மைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
கேமரா எடிட்டிங் அண்ட் டைரக்ஷன் வொர்க் என எல்லா தளங்களும் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் அழகாக செய்திருக்கிறார்கள் படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் அருமையான திரைக்கதை திகில் நிறைந்த கதை ஓட்டம் அருமை.
ரேட்டிங் 3 / 5