தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.*

*தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.*

ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும்
“குக்குரு குக்குரு ” பாடல்
வெளியானது.

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார்.
கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் A அலெக்சின்
தனியிசைப்பாடல்களுக்கு
வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறார்.

உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப்பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இசைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்சிஸ்.

குக்குரு குக்குரு கானா பாடலை ஸ்பெயின் நடனக்கலைஞர் களோடு பாடகி இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

யூடியூப் ல் வைரலாகி வருகிறது இந்த பாடல்

#tamilkana
Comments (0)
Add Comment