மிஷன் சேப்டர் 1 திரைவிமர்சனம்

மிஷன் சேப்டர் 1 திரைவிமர்சனம்

லைகா தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பரத் போபன்னா, அபிஹாசன், பேபி இயல் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம்  மிஷன் சாப்ட்டர் 1.

கதை

படத்தின் முதல் கட்சியிலேயே  பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிட்டார்கள். இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழிக்க நினைப்பதுதான் தீவிரவாதிகள் தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து  லண்டனுக்குச் செல்கின்றனர்.

லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார்.    கோயம்பதூரில் வசித்து வரும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நினைக்கிறார். இதனால் தன்னிடம் இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று   பணத்தை ரெடி செய்கிறார். அருண் விஜய் தன் மகள் மருத்துவ செலவிற்கான மொத்த பணத்தையும் லண்டனிற்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாது என்பதால் ஒருவரிடம் கொடுத்து

லண்டனில் தான் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அந்த நபர் அருண் விஜய்யிடம் ரூபாய் நோட்டு ஒன்று கொடுக்கிறார். இதன் மூலம்தான் லண்டனில் பணத்தைபெற்றுக் கொள்ள முடியும். இதையடுத்து லண்டனுக்கு செல்லும் அருண் விஜய்க்கு நர்சாக பணிபுரியும் நிமிஷா சஜயன் உதவி செய்கிறார். இந்த நேரத்தில் ரூபாய் நோட்டுஇருக்கும் பர்ஸை

திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்கின்றது. அப்போது காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் திவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க தீவிரவாதிகளால் சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகின்றது.  அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டனரா? இல்லையா? அருண் விஜய் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

 

அருண் விஜய் நடிப்பிலும்  சண்டைக்காட்சிகளிலும்  சிறப்பாக நடித்துள்ளார்.  அருண் விஜயின் பசிக்கு தீனிபோடும் விதமாக ஸ்டண்ட் சில்வாவின் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தது. எமி ஜாக்‌ஷன்  நடிப்பிலும் சண்டைகாட்சியிலும் அசத்துகிறார். நிமிஷா சஜயன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். அருண் விஜய்யின் குழந்தை  பேபி இயல் பேசும் எமோஷனல் வசனங்கள் உருக வைக்கிறது.

சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவு காட்சிகள் நம்மை லண்டனுக்கே அழைத்துச் செல்கின்றன. படத்தில் பாடலும்  பிண்ணனி இசையும்  ரசிக்கும்படி கொடுத்துள்ளார் ஜி.வி.  பிரகாஷ்.

இயக்குனர் விஜய்  மகள் பாசம் கலந்த அதிரடி ஆக்ஷன்  கதையை  எல்லோரும் ரசிக்கும்படி பொங்கல் விருந்தாக கொடுத்துள்ளார்.  பாராட்டுக்கள்.

#missionchapter1moviereview
Comments (0)
Add Comment