Glassmates Movie Review

குட்டிபுலி ஷரவண சக்தி இயக்கத்தில் அங்கையர்கண்ணன் கதாநாயகனாக நடித்து தயாரித்து ள்ள படத்தில் பிரானா, மயில்சாமி, அருள்தாஸ், மீனாள், சாம்ஸ், அபிநக்ஷத்ரா மற்றும் பலர் நடித்துள்ள படம் கிளாஸ்மேட்ஸ்

கதை

இரண்டு நண்பர்கள் (அங்கையர்கண்ணன், குட்டிபுலி ஷரவண சக்தி) சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர்இருவரும் மதுபழக்கத்திற்குஅடிமையாகி குடியும் கும்மாளமாய் வாழ்ந்து வருகின்றனர் குடும்பத்தை கவனிக்காமல். இவர்கள் குடிப்பழக்கத்தால் மயில்சாமி இறந்துவிடுகிறார். இதன் பிறகு மயில்சாமி குடும்பம் என்ன ஆனது? புதிதாக கல்யாணம் ஆன அங்கையர்கண்ணன் மனைவி கர்ப்பத்துடன் இவரை பிரிந்து தந்தை வீட்டிற்கு செல்கிறார். இவர்கள் மீண்டும் இணைந்தார்களா? குட்டிப்புலி சரவணசக்தி மனைவி டீச்சராக இருக்கிறார். இவருக்கு மகளும் இருக்கிறார். இவரது குடிபழக்கத்தால் இவரின் குடும்பத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகர்களாக அங்கையர்கண்ணன் குட்டிபுலி ஷரவண சக்தி நன்றாக நடித்திருக்கிறார்கள். அங்கையர்கண்ணன் மனைவியாக நடித்தவரும் குட்டிபுலி ஷரவண சக்தி மனைவியாக நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மயில்சாமியின் நடிப்பும் அருமை. மற்றும் இதில் நடித்த TM கார்த்திக் அருள்தாஸ், சாம்ஸ், Mp முத்துப்பாண்டி, அபிநக்ஷத்ரா அருள்தாஸ், மீனாள், ஜாங்கிட் IPS என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
அருண்குமார் செல்வராஜின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரித்வியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் குட்டிபுலி ஷரவண சக்தி குடும்பத் தலைவன் குடித்தால் அந்த குடும்பம் சீர்கெட்டு விடும் என்பதை சுவாரஸ்யமாகசொல்லியுள்ளார்பாராட்டுக்கள்.

#glassmatesmoviereviee
Comments (0)
Add Comment