*சமுத்திரக்கனி , நடிக்கும் “ராமம் ராகவம்” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி* நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார். அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது . இன்று இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டார். உடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். பிப்ரவரி 21 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. தமிழில் GRR Movies வெளியிடுகிறார்கள். திரைக்கதை இயக்கம் – தன்ராஜ் கொரனாணி. தயாரிப்பு: பிருத்வி போலவரபு PRO – Guna