மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்- கிளிம்ப்ஸ் – பாடல்- ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி திரையுலக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

#acemovie#Makkal Selvan’ Vijay Sethupathi
Comments (0)
Add Comment