துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு : இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் – துணிச்சல் – அதிரடி ஆக்சன் காட்சிகள் – ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும், புதிய யுக கலைஞரான அனுமான் கைன்ட்டின் சிறப்பு ஒத்துழைப்பும்.. பாடலுக்கு எதிர்பாராத வகையில் ஒரு தனித்துவத்தை அளித்திருக்கிறது. அவர்களது பிரத்யேகமான பாணியிலான இந்தப் பாடல், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படத்தை B 62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆதித்யா தர் எழுதி இயக்கியிருக்கும் ‘துரந்தர் ‘ திரைப்படம் – தெரியாத மனிதர்களைப் பற்றிய சொல்லப்படாத கதையை விவரிக்கிறது.

#DHURANDHAR
Comments (0)
Add Comment