அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக,  நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் ( Traffic ) எழுதியுள்ளனர். Magic Frames நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அபிமன்யு திலகன், அசீஸ் நெடுமங்காடு, அஷ்வத் லால் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டிருக்கும்  ‘பேபி கேர்ள்’, விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நிவின் பாலியின் அழுத்தமான  நடிப்புடன், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரில்லர்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#baby girl #nivin pauly
Comments (0)
Add Comment