நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது.

இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார்.  சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும்.

ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து,  இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு  சேர்த்தனர்.

மகத்தான மன்னனின் எழுச்சியை போர்க்களமே வணங்கும் தருணம் இது. வரலாற்றை குலுக்கும் இந்த கர்ஜனை புதிய அத்தியாயத்தை எழுத வருகிறது.

மாஸ் எலிவேஷன் மற்றும் அதிரடி கதைக் கட்டமைப்பில் பிரசித்தமான கோபிசந்த் மலினேனி, முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்குகிறார். நந்தமூரி பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் இதுவரை காணாத ஒரு புதிய, ஆச்சரியமான அவதாரத்தில் காட்சிப்படுத்தும் விதமாக,  இந்தக் கதை உருவாகிறது.

சிறப்பு போஸ்டரில், நீண்ட முடி, பூரண தாடி, வாள் மற்றும் நங்கூரத்தைத் தாங்கி, அரச கம்பீரத்துடன் நிற்கும் அதிபதியாக பாலகிருஷ்ணா மிளிருகிறார்.

வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்து,  பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒரு எபிக் அனுபவத்தை, வழங்கப் போகிறது இந்த படம்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்:
நந்தமூரி பாலகிருஷ்ணா
நயன்தாரா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து, இயக்கம்:கோபிசந்த் மலினேனி
தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு
வழங்குபவர்: விருத்தி சினிமாஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

#nbk111Nandamuri Balakrishna
Comments (0)
Add Comment