சாட்பாட், ராக்பாட் (Chatbot – Ragbot) என்ற இரண்டு புதிய AI செயலியை 15 துறை சார்ந்த சத்யபாமாவின் மாணவர்கள் 1300 பேர் ஒன்று சேர்ந்து 2 மணி நேரத்தில் உருவாக்கி இந்தியன் புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பிடித்து இந்திய அளவில் புதிய சாதனையை படைத்து அசதியுள்ளனர்.

சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் 1300 பேர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து “ஜெனரேட்டிவ் AI” என்ற புதிய செயலியை உருவாக்கினர்.

சாட்பாட், ராக்பாட் (Chatbot – Ragbot) என்ற இரண்டு புதிய AI செயலியை 2 மணி நேரத்தில் உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, மின்னணு வணிகம், தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்து சந்தேகங்கள் இந்த AI செயலி மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றனர்.

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் 15 துறை சார்ந்த சத்யபாமாவின் மாணவர்கள் 1300 பேர் கல்லூரி வளாகத்தில் ஒன்று சேர்ந்து புதிய AI செயலியை உருவாக்கி இந்தியன்புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பிடித்து புதிய இந்திய அளவில் சாதனையை படைத்துள்ளனர்.

முன்னதாக 1000 மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் இதுபோன்று ஒரு செயலியை உருவாக்கிய சாதனையை முறியடித்து சத்யபாமா கல்லூரி மாணவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

இந்த சாதனையை அங்கீகரித்த இந்திய புக் ஆப் ரெகார்ட் நிறுவனம் சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த கற்றலை ஊக்குவிப்பதில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

#ai revolution#book of records#sathyabama institute
Comments (0)
Add Comment