ஹனுமான் படத்தின் முதல்பாதி சூப்பரா இருக்கு. அதே போல VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய விதம் அருமை.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஹனுமான். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். பிரம்மாண்டமான 12 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
பான் இந்திய சினிமாவில் தெலுங்கு சினிமா மீண்டும் இடம்பிடித்துள்ளது. தேஜ சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு காமெடி ஹைலைட்.
மாஸ் கிளைமாக்ஸ் ஹனுமான் கிளைமாக்ஸ் 30 நிமிடத்தை மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி இருந்தது. மேலும், விஎஃப்எக்ஸ், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஹனுமனாக நடித்த தேஜ சஜ்ஜாவின் நடிப்பு சூப்பர், ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.
அனைத்து தரப்பினரும் இத்திரைப்படத்தை பார்க்கும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டு.
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்
ஹென்றி G