கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்

இயற்கை எழில் சூழ்ந்த தேனி ஆண்டிப்பட்டியில் இருக்கும் கதாநாயகன் செல்லதுரை. அம்மா தகாத உறவால் செல்லதுரையையும் அவன் தங்கை சுதாவையும் சிறுவயதிலேயே விட்டுவிட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரையின் அப்பா செல்லதுரையையும் அவன் தங்கையும் பாட்டின் பொறுப்பில் விட்டுவிட்டு …அவரும் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். இவர்கள் இருவரையும் பாதுகாக்கும் பாட்டி கொஞ்ச நாளிலேயே இறந்து போக கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவன் தங்கைக்கும் பெரியப்பா யோகி பாபு ஆதரவாக இருக்கிறார். தன்னுடைய கோழிப்பண்ணையிலேயே செல்லதுரைக்கு வேலையும் போட்டுக் கொடுத்து தங்கை சுதாவையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார், சின்ன வயதில் அம்மா செய்த காரியத்தால் ஊரில் பல சந்தர்ப்பங்களில் தலைகுனிவால் அவதிப்படுகிறான் செல்லதுரை ,இன்னொரு பக்கம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் தங்கைக்கு காதல் வருகிறது அம்மாவைப் போல தங்கையும் தன்னை அவமானப்படுத்தி விடுவாளோ என்ற பயத்தில் கோபப்படுகிறான் செல்லதுரை. அதைத்தொடர்ந்து காதலை ஏற்றானா என்ன நடந்தது என்பதை விளக்கும் திரைப்படம் தான் கோழி பண்ணை செல்லதுரை. ஒருவருக்கொருவர் மீது வைத்துள்ள அன்பு என்றும்.. கைவிடாது என்பதுதான் கதையின் கரு. கைவிடப்பட்ட குழந்தைகளை ஆதரவு கொடுப்பதுதான் யோகி பாபுவின் நடிப்பு,  இதை இயக்குனர் திறமையாக கையாண்டு இருக்கிறார். கதை ஓட்டத்தில் நகைச்சுவை நகர்கிறது.கதையின் நாயகன் ஏகன் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தங்கை கதாபாத்திரத்தில் வரும் சத்யாவின் நடிப்பும் நன்று. கதாநாயகியாக வரும் பிரிகிடாவுடைய நடிப்பில் பல இடங்களில் செயற்கைத்தனம், ரகுந்ததனுடைய இசை கதைக்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கிறது. அசோக்ராஜூடைய ஒளிப்பதிவு தேனியின் அழகை படம் பிடித்து காட்டியிருக்கிறது.இசை, ஒளிப்பதிவு, ஆபாச வசனங்கள் இல்லாதது, ரத்தம் தெறிக்கும் வன்முறை இல்லாதது என கதையில் ஆறுதல் தரும் விஷயங்கள் நிறையவே இருக்கு.

கடைசியாக அன்பும் பொறுமையும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கிறது என சொல்கிறார்கள்.

நன்றி.

ஹென்றி G

2.5/5

#KOZHIPANNAI CHELLADURAI
Comments (0)
Add Comment