‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”

சென்னை:

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’,  ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”!

நினைக்காத நாளில்லை படத்தில் வடிவேலு, பார்த்திபன் இருவர் கூட்டணியில் ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற… காமெடி, தீக்குச்சி படத்தில் நரிக்குறவனாக வடிவேலு படம் முழுவதும் செய்த காமெடி போல், விழுந்து சிரிக்க காமெடிகளும், விறுவிறுப்பான காட்சிகளும், இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது!

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா. சாதிக்க துடிப்பவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை, உயிரோட்டத்தோடு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.ராஜா! நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன் ரசிகர்கள் ரசிக்கவும், மக்கள் சிந்திக்கவும், விரைவில் திரைக்கு வருகிறது “சூரியனும் சூரியகாந்தியும் “!

 

 

 

"Suriyanum Suryakandhiyum" Movie NewsFeatured
Comments (0)
Add Comment