“கொலை” திரைப்பட விமர்சனம்!

சென்னை:

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தயாரிப்பில், பாலாஜி குமார் இயக்கத்தில், “கொலை” படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, நடிகர் முரளி சர்மா, சித்தார்த்த ஷங்கர், ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் பிரபலமான மாடல் அழகியான ‘லைலா’ என்ற மீனாட்சி செளத்ரி. மர்மமான முறையில்,   கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இக் கொலை வழக்கை விசாரிக்க மேலதிகாரி ஆனந்த்,,, பயிற்சி பெற்ற  ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கிறார் . பல வழக்குகளில் உண்மையை கண்டுபிடித்து கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த, அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனி தலைமையில் விசாரணை மேற்கொள்ளுமாறு ரித்திகா சிங்கிடம் கூறுகிறார்.

இந் நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆரம்பத்தில் இக் ‘கொலை’ வழக்கை விசாரிக்க மறுக்கும் விஜய் ஆண்டனி,,,, பின் ரித்திகா சிங்கின் வற்புறுத்தலுக்கு இணங்க வழக்கை விசாரிக்க உடன்படுகிறார். இருவரும் இணைந்து விசாரணையை மேற்கொள்ளும்போது கொலை செய்யப்பட்ட மீனாட்சி செளத்ரியுடன் தொடர்பில் இருந்த முக்கிய நபர்களை பற்றிய விவரங்களை தெரிந்துக் கொண்டு ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரிக்கிறார். இறுதியில் கொலை செய்த கொலையாளியை எப்படி துப்பறிந்து  விஜய் ஆண்டனியும், ரித்திகா சிங்கும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லும் படம் தான் ‘கொலை’

விஜய் ஆண்டனி இதுவரை நடித்த படங்களிலே அதிக ஈடுபாட்டோடு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘விநாயக்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு. கொஞ்சம் நரைத்த முடியுடன் அவர் தோன்றும் முதல் படம் என்றாலும் அவர்  சின்னச் சின்ன விஷயங்களில்  அமைதியான முறையில் நடிப்பை வெளிபடுத்தி அனைவரையும்  கவனிக்க வைக்கிறார். மனைவி, மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரது நடிப்பில் புதிய பரிமாணம் தெரிகிறது. கம்பீர உடல்மொழியுடன், ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் மாறுபட்ட முறையில் இருப்பதை பாராட்டலாம்.

இந்தக் கொலை வழக்கை முதலில் விசாரிக்கும் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரித்திகாசிங். அதிரடிக்காட்சிகள் இல்லையெனினும் தான் வருகின்ற காட்சிகளில் அழகாகவும் அளவாகவும் நடித்து இருக்கிறார்.

மாடல் அழகி லைலா என்ற வேடத்தில் நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, அவரது கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். மாடல் அழகி என்பதால் அதற்கேற்ற காட்சிகளில் அனாயசமாக தனது பாடி லாங்குவேஜ் மூலமாக ஒரு ஈர்ப்பை உண்டு செய்திருக்கிறார். முரளி சர்மா, மீனாட்சி செளத்ரியை படுக்கையறைக்கு அழைக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசும் காட்சிகளில் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். 

மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என அனைத்து நடிகர்களும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களுக்கு கொடுத்த பணியை  இயல்பான  நடிப்பின் மூலம் படத்திற்க்கு  கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிரார்கள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஹாலிவுட்படத்திற்கு இணையாக பன்மடங்கு உயர்த்தி காட்டியிருக்கிறது. வித்தியாசமான கோணங்கள் அமைத்தது மட்டுமல்லாது,  எது கிராபிக்ஸ், எது உண்மை என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி காட்சிகளை படமாக்கி கடுமையாக உழைத்திருக்கிறார்.

கிரிஷ்கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களை  ரசிக்கலாம்.  ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல் அனைவரையும் கவர்கிறது. பின்னணி இசையிலும் வழக்கமான க்ரைம், திரில்லர் ஜானர் படங்களுக்கானதாக அல்லாமல் புதிய வடிவில் இருக்கிறது.

கொலை செய்யும் மனிதர்களுக்குள் உள்ள சைக்கோ போன்ற உளவியல் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இந்தப்படத்தில் நாம் யோசித்திராத ஒரு பிரச்சனையை சொல்கிறார் இயக்குநர் பாலாஜி கே. குமார். ஒரு தனித்தன்மை வாய்ந்த கதையாக எழுதி,  ஹாலிவுட் ஸ்டைலில் காட்டியிருப்பதை பாராட்டலாம்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. வித்தியாசமான கோணங்கள் அமைத்தது மட்டுமின்றி, கிராபிக்ஸ் காட்சிகள் தெரியாத வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறார்.

கிரிஷ்கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் வரவேற்புப் பெறுகிறது.பின்னணி இசையிலும் வேறுபாடு காட்ட முயன்றிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த “கொலை” படம் ஹாலிவுட் தரத்திற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்து இருப்பதால் அனைவரும் பார்க்கலாம்.

திரைநீதி செல்வம்.

 

"Kolai" Review News.Featured
Comments (0)
Add Comment