ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத்துள்ளது!

CHENNAI:

ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான ‘உருகி உருகி’ என்ற டிராக் அனைவரையும் ‘ஜோ’வின் உலகிற்குள் அழைத்து சென்றது. படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜா திரையில் தோன்றும் பாடல் குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இது கூட்டுவதாக அமைந்துள்ளது.

இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை. அஜித் குமாரின் ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக் இந்த ‘ஒரே கனா’ பாடலை எழுதியுள்ளார். ‘அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் இருந்து ‘அடியே’ மற்றும் இந்த படத்தில் இருந்து ‘உருகி உருகி’ போன்ற பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார்தான் இந்த ‘ஒரே கனா’ பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் தங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும் என்று ‘ஜோ’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘ஜோ’ ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம். இந்தப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி.அருளானந்து & மேத்வோ அருளானந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. (எடிட்டிங்), ஏபிஆர் (கலை), அபு & சால்ஸ் (கோரியோகிராஃபி), பவர் பாண்டியன் (ஆக்‌ஷன்), வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா (பாடல் வரிகள்), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), எம். முகமது சுபியர் (காஸ்ட்யூமர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

 

 

FeaturedRio Raj’s “Joe” with promo song ‘Ore Kanaa’ penned by “Chilla chilla” lyricist Vaisagh NEWS
Comments (0)
Add Comment