மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு Read more
*வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!* *கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!* உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும். ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார். இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது. Read more
மோகன்லாலின் பிறந்தநாளில் அவர் நடிப்பில் தயாராகும் ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர் Read more
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது Read more
துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது Read more
துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !! Read more