Take a fresh look at your lifestyle.

Pagalariyan Movie Review

111

இயக்குனர் முருகன் இயக்கத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் “பகலறியான்”.
இசை விவேக் சரோ. ஒளிப்பதிவு அபிலாஷ்.
ரிஷிகேஷ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் லதா முருகன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்

கதை

தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷயா வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அவர் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியுடன் பயணிக்கிறார்.

 

மறுபக்கம் ரவுடியான முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையை தேடி அலைய, அவரின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி வைத்து, அதன் மூலம் அவரை பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒருபக்கம் எதிரிகளை சமாலித்தவாறு தங்கையை முருகன் தேடிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெற்றி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் நபரிடம் பணம் பெறுவதோடு, அக்‌ஷயாவுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். வெற்றியின் இத்தகைய செயலை அறிந்துக்கொண்டு அதிர்ச்சியடையும் அக்‌ஷயா என்ன செய்தார்?, வெற்றி இப்படி செய்ய காரணம் என்ன?, ஆபத்தில் இருக்கும் தங்கையை தேடி அலையும் முருகன் அவரை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? என்பதே படத்தின் சுவாராஸ்யமான ‘பகலறியான்’. படத்தின் கதை

வெற்றி வழக்கம் போல் சிறப்பாக நடித்திருக்கிறார்,
சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வசனம் பேசாமல் நடித்திருக்கும் மற்றொரு நாயகன் முருகன், நாயகன் வெற்றிக்கு சவால் விடும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்ற அடையாளம் தெரியாதவாறு கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பவர், கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் வினு பிரியாவும் நன்றாக ரடித்திருக்கிறார்
காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு அதிரடியான வேடத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். போலீஸாக நடித்திருக்கும் தீனாவின் கதாபாத்திரத்திம் அருமை. மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்
படம் முழுவதும் கதை இரவு நேரத்தில் நடக்கிறது. ஆனால், அந்த உணர்வே ரசிகர்களிடம் தெரியாத வகையில் ஒளிப்பதிவாளர் அபிலாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை ரசிக்க வைக்கிறது.

படத்தில் இரண்டாவது நாயகனாக நாயகனாக நடித்திருக்கும் முருகன், கதை எழுதி இயக்கியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில், ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்து இரூக்கிறார். பாராட்டுக்கள்