கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில் கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் A வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், A வெங்கடேஷ், விஜய் டிவி பாலா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தில்ராஜா.
கதை
படத்தின் ஓப்பனிங்கில் கதாநாயகன் விஜய் சத்யா மினிஸ்டர் அடியாட்களால் அடிக்கப்படுகிறார்.ஏன் அடிக்கிறார்கள் என்று விஜய் சத்யாவால் கதை சொல்லப்படுகிறது. விஜய் சத்யா கார் மெக்கானிக்காவும் கன்ஸ்டரக்ஷன் டிசைனராகவும் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மனைவி ஒரு மகள். மகளின் பிறந்தநாளுக்காக மாலுக்கு சென்று பர்சேஸ் செய்துவிட்டு வருகையில் மினிஸ்டர் மகன் மற்றும் நண்பர்களால் தன் மனைவிக்கு பிரச்சினை ஏற்படுகிறது.அந்த பிரச்சினையின் சண்டையில் விஜய் சத்யாவால் மினிஸ்டர் மகன் இறந்துவிடுகிறார். இதை தெரிந்துகொண்ட மினிஸ்டர் A வெங்கடேஷ் விஜய் சத்யாவின் குடும்பத்தையே அழிக்க முயல்கிறார். விஜய் சத்யா தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் சத்யா நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின் நன்றாக நடித்துள்ளார். மினிஸ்டராக A வெங்கடேஷ் நன்றாக நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் தயாரிப்பாளர் V. பழனிவேல் கவுன்சிலராக சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார்,விஜய் டிவி பாலா, சம்யுக்தா, கராத்தே ராஜா, இமான் அண்ணாச்சி, தனிகைவேல் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையில் பாடல்கள் எழுந்து ஆட வைக்கிறது. பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.மனோ V நாராயணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பாளர் V பழனிவேல் கதையை இயக்குநர் A வெங்கடேஷ் இன்னும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கலாம்