ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை
மேஜர் முகுந்த் வரதஜானனின் வீரமரணத்தைத் தொடர்ந்து இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது அறிவித்தது. முகுந்தின் மனைவியாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் பார்வையில் தொடங்குகிறது அமரன் படத்தின் கதை.
மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் இந்துவின் சீனியராக வருகிறார் முகுந்த். பாண்டிச்சேரியில் நடக்கும் ரேம்ப் வாக் போடி ஒன்றில் கலந்துகொள்ள இந்துவுக்கு முகுந்த் பயிற்சி கொடுக்கிறார். இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்து தனது காதலை தனது வீட்டில் தெரிவிக்கிறார். ராணுவத்தில் வேலை பார்ப்பவருக்கு தனது பெண்ணை கல்யாணம் செய்துதர மறுக்கிறார் இந்துவின் அப்பா. அவரை சம்மதிக்க வைத்து இந்துவும் முகுந்தும் திருமணம் செய்துகொள்கின்றனர். ராணுவத்தில் கேப்டன் , மேஜர் என அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்கிறார் முகுந்த். 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவனான அல்தாஃப் வானியை பிடிக்கும் முயற்சியின் போது முகுந்த் உயிரிழக்கிறார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை.
சிவகார்த்திகேயன் ஒருபக்கம் காதலனாகவும் இன்னொரு பக்கம் கடுமையான ராணுவ வீரனாகவும் வழக்கமான தனது பாடி லாங்குவேஜை கட்டுக்குள் வைத்து படம் முழுவதும் கம்பீரமான தோற்றத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி இந்துவாக நடித்திருக்ஙிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்.சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் நன்றாக நடித்துள்ளார். ராகுல் போஸ் தனது ரோலில் நன்றாக நடித்திருக்கிறார்.
சாய் பல்லவியின் தந்தை மற்றும் அண்ணன்கள், மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமி என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.ஜி.வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.
சி.எச்.சாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
காஷ்மீர் என்கிற சர்ச்சைக்குரிய கதைக்களத்தை கையாண்டுள்ளார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி காஷ்மீரின் அரசியல் சூழலில் இந்திய ராணுவத்யைச் சேர்ந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் ரசிக்கைம்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டுக்கள்.