மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் Ags Entertainment வெளியீட்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் பகத் பாசில் ராஷ்மிகா ஸ்ரீலீலா சுனில் ராவ் ரமேஷ் ஆடுகலம் நரேன் ஜெகபதிபாபு மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் புஷ்பா 2.
கதை
அல்லு அர்ஜூன் முதலமமச்சரை(ஆடுகலம் நரேன்) சந்திக்க செல்லும்போது
அல்லு அர்ஜூன் மனைவி ராஷ்மிகா தன் கணவன் முதலமைச்சருடன் இருக்கும் போட்டோ வீட்டில் மாட்டவேண்டும் என்று சொல்ல சரி என்று சொல்லிவிட்டு முதலமைச்சரை பார்க்க சித்தப்பா என்பவருடன் செல்கிறார் அல்லு அர்ஜூன். புஷ்பா ரவுடி என்பதால் முதலமைச்சர் போட்டோ எடுக்க மறுத்ததோடு அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனை பொறுக்க முடியாத அஸ்லு அர்ஜூன் சித்தப்பா என்பரை தன் கடத்தல் மூலம் பல கோடிகளை சம்பாதித்து முதலமைச்சராக்கி அவருடன் போட்டோ எடுத்து தன் மனைவி ஆசைப்பட்டபடி வீட்டில் மாட்ட நினைக்கிறார். அல்லு அர்ஜூன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? புஷ்பா பாகம் 1 ல் பகத் பாசிலிடம் போட்டி போட்டது இந்த பாகத்திலும் புஷ்பா செய்யும் செம்மரக் கடத்தலை பிடிக்கும் போட்டி தொடர்கிறது. அதுமட்டும் அல்லாமல் புஷ்பா தன்னிடம் மன்னிப்பு கேட்டால் ஒத்துழைப்பு தருவதாக சொல்கிறார் சித்தப்பா என்பவரிடம். புஷ்பா பகத் பாசிலிடம் மன்னிப்பு கேட்டாரா? என்பதும் பிரதம மநாதிரியான ஜெகபதிபாபுலக்கும் புஷ்பாவுக்கும் என்ன பிரச்சினை? அதிலிருந்து புஷ்பா உயிர் பிழைத்தாரா? என்பதும் புஷ்பா பாகம் 3 லீட் என்ன என்பதுமே புஷ்பா பாகம் 2 படத்தின் சுவாராஸ்யமான கதை.
புஷ்பராஜாக அல்லு அர்ஜூன் நடிப்பிலும் நடனத்திலும் அசத்தியிரூப்பதோடு சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். அல்லு அர்ஜூன் மனைவியாக ராஷ்மிகா அலருக்கு ஈடு கொடுத்து நடிப்பிலும் நடனத்திலும் கவர்ச்சியிலும் விருந்து படைத்துள்ளார். பகத் பாசிலின் நடிப்பு மிரட்டல். முதலமைச்சராக ஆடுகலம் நரேன் சித்தப்பா கேரக்டர் ஜெகபதிபாபு ராவ் ரமேஷ் என இத் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. சாம் சி எஸ்ஸின் கூடுதல் பிண்ணனி இசை மிரட்டல். Mireslow kuba Brozek ன் ஒளிப்பதிவு மிரட்டல்.
இயக்குநர் சுகுமார் வழக்கமான கடத்தல் ஆக்ஷன் கதையை பிரமாண்டமான மேக்கிங்கில் அதிக பொருட் செலவில் எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
Next Post